இதுக்கு தான் ஸ்மார்ட் போன் வாங்கி இருக்காரா சீனி பாட்டி. செந்தில் பகிர்ந்த பல தகவல்கள்.

0
5659
seeniyammal
- Advertisement -

சிட்டுக் குருவி சீனி பாட்டி அவர்கள் தற்போது சூப்பர் ஸ்டார் படத்தில் நடித்து வருகிறார். 2017 ஆம் ஆண்டு இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய்யின் நடிப்பில் வெளி வந்த படம் மெர்சல். இந்த படத்தில் சிட்டுக் குருவி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சீனியம்மாள் பாட்டி. அதோடு முதல் படத்திலேயே சீனியம்மாள் பாட்டி மக்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து சீனியம்மாள் பாட்டி அவர்கள் 2019 ஆம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளி வந்த ‘விசுவாசம்’ என்ற படத்திலும் நடித்து உள்ளார். மேலும், சீனியம்மாள் பாட்டி சினிமாவுக்கு வந்த ஆரம்பத்திலேயே முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
மிர்ச்சி செந்தில், சீனி பாட்டி

- Advertisement -

இந்த சீரியல் தற்போது 500வது நாள் எபிசோடை கடந்து இருக்கிறது. அதற்காக விஜய் டிவி இந்த சீரியலுக்கு விழா ஒன்றை நடத்தி வந்தார்கள். இந்த விழாவில் மாயனுக்கு அடுத்த படியாக அனைவரையும் கவர்ந்தது சீனி பாட்டி தான். சீரியலில் சீனி பாட்டையும், மாயன் வரும் காட்சிகளை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு பாட்டியின் நடிப்பும், நகைச்சுவைப் பேச்சும் மக்கள் மத்தியில் பிரபலம் ஆகியது. சீனியம்மாள் பாட்டி அவர்களுடைய புள்ளைங்க, பொண்ணுங்க எல்லாத்தையுமே கல்யாணம் பண்ணி கொடுத்து விட்டார்கள். அவங்க பையன் சினிமாவுல் தான் வேலை பார்த்துட்டு வந்தான். அப்ப தான் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் மூலம் சினிமா துறையில் நடிகை வாய்ப்பு கிடைத்தது.

இதையும் பாருங்க : அப்பா, போட்ட போட்டோ எல்லாம் கைவிடல. முரட்டு இயக்குனரின் வாய்ப்பால் நிம்மதியடைந்த ஷாலு.

வெற்றிவிழா மேடையில் சீனி பாட்டியின் பேச்சு அனைவரையும் கண்கலங்க வைத்தது. சாகப்போற காலத்துல யாரையும் நம்பி யார் கையையும் எதிர் பார்க்கக் கூடாது, நாமே சம்மதித்து நம்மளை நாமே பார்த்துக் கொள்ள வேண்டும், யாரையும் தொந்தரவு செய்யக் கூடாது என்று அவர் பேசி முடித்த போது அரங்கமே எழுந்து நின்று அவருக்கு கை தட்டியது. அதுமட்டும் இல்லாமல் சீனி பாட்டி அவர்கள் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தில் நடித்துக் கொண்டு இருப்பதாகவும் தகவல் வந்து உள்ளது. சீனி பாட்டிக்கு தற்போது 80 வயது ஆகிறது. தனியாளாக யாருடைய தயவும் இல்லாமல் சென்னையில் வீடு எடுத்து தங்கி வருகிறார்.

-விளம்பரம்-
மிர்ச்சி செந்தில், சீனி பாட்டி

சூட்டிங்க்கு வரும் போதும், போகும் போதும் அவர் தனியாக தான் வருவார். தன்னுடைய சிகை அலங்காரம் எல்லாத்தையும் அவரே செய்து கொள்வார். அவருடைய டயலாக் என்னவென்று முதலில் கேட்டு வாங்கிக் கொண்டு அவருடைய பாணியில் நடித்து பேசுவார். இந்த வயதில் அவங்களோட தன்னம்பிக்கையும், சுறுசுறுப்பும் தான் மற்றவர்களையும் ஊக்கப்படுத்தியது என்றும் சொல்லலாம். ஷூட்டிங்கில் எப்போதுமே சீனி பாட்டி ரொம்ப கலகலப்பாக இருப்பார்கள். இதுவரை ஒரு முறை கூட அவர் என்றைக்கும் சோர்ந்து போய் யாரும் பார்த்ததில்லை. அந்த அளவிற்கு மன நம்பிக்கையுடனும் இருப்பவர்.

அவர்களைப் பார்த்தாலே அனைவருக்கும் புத்துணர்ச்சி ஆகி விடும் என்றும் சொல்லலாம். சீனி பாட்டி ஒரு ஸ்மார்ட் போன் வாங்கினார் அந்த போன் மூலம் தங்களுடைய பிள்ளைகளுக்கு அடிக்கடி போட்டோ எடுத்து அனுப்பி மகிழ்ந்து வருவார். மேலும், வெற்றி விழாவின் போது சீனி பாட்டி கண்கலங்கிய வீடியோவை தற்போது சீரியல் ஹீரோ செந்தில் அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து உள்ளார். மிர்ச்சி செந்தில் சீனி பாட்டி குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

Advertisement