கிறிஸ்துவ முறைபடி திருமணத்தை முடித்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை. வீடியோ இதோ.

0
974

விஜய் தொலைக்காட்சியில் சமீப காலமாகவே சினிமா டைட்டல்களை மையமாக கொண்டு பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. கடைக்குட்டி சிங்கம் ஈரமான ரோஜாவே, நாம் இருவர் நமக்கிருவர் என்று சினிமா தலைப்புகளை வைத்து பல்வேறு சீரியல்கள் வந்தது. அதே போல ராஜா ராணி, கனா காணும் காலங்கள், ஆபீஸ், மௌன ராகம் என்று பல சீரியல்கள் இரண்டு பாகங்கள் வெளியானது. அந்த வகையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கிருவார் சீரியலும் இரண்டு பாகமாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த தொடரின் முதல் பாகத்தில் செந்தில், ரக்ஷா, ராஷ்மி என்று பலர் நடித்து இருந்தனர். இதில் தாமரை என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ராஷ்மி. இப்படி ஒரு நிலையில் இவருக்கு கிறிஸ்துவ முறைப்படி திருமணம் முடிந்துள்ளது. நடிகை ராஷ்மிக்கு கடந்த நவமபர் 27 ஆம் தேதி ரிச்சு என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது.

இதையும் பாருங்க : நான் சிரிச்சதால தான் டெலீட் பன்னங்களா – கேலிகளுக்கு விளக்கமளித்த கௌரி கிஷன்.

- Advertisement -

இந்த சீரியலின் இரண்டாம் பாகம் தற்போது சென்று கொண்டு இருந்தாலும் முதல் பாகத்தில் வந்த ரக்‌ஷா, ரேஷ்மி என்று இரண்டு நடிகைகளையும் நீக்கியது ரசிகர்களை பெரிதும் அதிர்ச்சியாக்கியது. . இதுகுறித்து பேட்டி அளித்து இருந்த ரக்ஷா, லாக்டௌன் அறிவிச்சதும் பெங்களூரு கிளம்பி வந்தேன். ரெண்டரை மாசம் கழிச்சு ஷூட்டிங்னு சொல்லிக் கூப்பிட்டாங்க. அப்ப பெங்களூரு, சென்னை ரெண்டு இடத்துலயுமே பாசிட்டிவ் கேஸ்கள் அதிகமா இருந்ததால எங்க வீட்டுல ஷூட்டிங்ல கலந்துக்க வேண்டாம்னாங்க.

சென்னையில தங்கியிருந்தாக்கூட எப்படியாவது ஷூட்டிங்ல கலந்துக்க முயற்சி பண்ணியிருப்பேன். ஸ்டேட் விட்டு ஸ்டேட் வர்றதுல இ-பாஸ் மாதிரியான் நடைமுறைகள் வேற இருந்ததால, `என்னால கலந்துக்க முடியாது’ன்னு சொன்னேன். திரும்ப முழு லாக்டௌன் முடிஞ்சு மறுபடியும் ஷூட்டிங் தொடங்கினப்ப எனக்கு எந்த அழைப்பும் வரலை என்று கூறியுள்ளார். ஆனால், சமீபத்தில் ஷூடிங் துவங்கி இருக்கிறது. எனக்கு ஒரேயொரு வருத்தம் என்னன்னா, `இதுதான் சூழல், வேற வழி இல்லை’ன்னு எனக்குத் தகவல் சொல்லியிருக்கலாம் என்று வருந்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement