நான் சிரிச்சதால தான் டெலீட் பன்னங்களா – கேலிகளுக்கு விளக்கமளித்த கௌரி கிஷன்.

0
4021
gouri
- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் எப்போதோ வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போயிக்கொண்டு இருந்த நிலையில் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாஸ்டர் படத்தின் டெலீடட் வீடியோ ஒன்றை அமேசான் நிறுவனம் வெளியிட்டது. அந்த வீடியோவில் சவிதாவிடம் (கௌரி கிஷன்) தவறாக நடந்து கொண்டதால் இரண்டு இளைஞ்சர்களை விஜய் அடித்து இருந்ததால் விஜய்யை கல்லூரி நிர்வாகம் அழைத்து கண்டிக்கும். அப்போது பெண்களை ஆண்களோடு பழக விடுவதாலும் பெண்கள் அவர்கள் இஷ்டத்துக்கு ஆடை அணிவதாலும் தான் அவர்கள் சவிதாவை அப்படி செய்தார்கள் என்று ஒரு ஆசிரியை கூற, அதற்கு விஜய் பெண்கள் அணியும் ஆடையை குறை சொல்லும் முன் ஆண்களுக்கு எப்படி ஒரு பெண்ணை தொட வேண்டும் என்று சொல்லிக்கொடுங்கள் என்று அறிவுறுத்துவார்.

இதையும் பாருங்க : ஒண்ட வீடும் இல்ல, ஒரு வேலை உணவும் இல்லை – பரிதாப நிலையில் பரியேறும் பெருமாள் கதிரின் தந்தை.

- Advertisement -

விஜய் இப்படி சீரியஸாக பேசிக்கொண்டு இருக்கும் போது கௌரி கிஷன் ஒரு காட்சியில் சிரித்துவிட்டார் அது தெல்லத் தெளிவாக தெரிய தான் இந்த காட்சியை லோகேஷ் நீக்கிவிட்டார் என்று பலர் கூறி வருகின்றனர். மேலும், கௌரி கிஷனை கேலி செய்து சமூக வலைதளத்தில் பல்வேறு விதமான மீம்களும் வைரலாக பரவி வந்தது. மேலும், இப்படி ஒரு காட்சி கௌரி கிஷனால் தான் போச்சி என்று பலரும் கூறி வந்தனர்.

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கௌரி கிஷன் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். அதில் பேசியுள்ள அவர், இந்த சீன் ரிலாசன போது நான் சிரித்ததை வைத்து சில மீம்கள் வந்தது. அதை பார்த்து நான் சிரித்தேன். ஆனால், நான் சிரித்தாள் தான் அந்த சீனை நீக்கி விட்டதாக பேச்சுகள் வருகிறது. அது உண்மையில்லை. இப்படி ஒரு சென்சிட்டிவான விஷயத்தை பற்றி எடுக்கும் போது நாம் அந்த கதாபாத்திரத்தில் தான் இருப்போம். அது ஜானுவாக இருந்தாலும் சரி, சவிதாவாக இருந்தாலும் சரி.

-விளம்பரம்-

தனிப்பட்ட முறையில் சொல்ல வேண்டும் என்றால் ஒரு சிலர் அழும் போது சிரிப்பது போல தான் இருக்கும். நான் என் கையை அப்படி பண்ணது சிரிப்பது போல தெரிந்து இருக்கும். நான் சிரித்தாள் தான் அந்த காட்சியை நீக்கிவிட்டார்கள் என்றால் அது எடிட்டிங்கில் தெரிந்திருக்கும். அப்படி தெரிந்திருந்தால் டப்பிங் வரை பண்ணி இருக்க மாட்டார்கள். டப்பிங் வரைக்கும் இந்த காட்சி படத்தில் இருக்கும் என்று தான் நினைத்தோம். ஆனால், ஒரு சில காரணத்திற்காக படத்தில் அந்த காட்சி வரவில்லை என்று கூறியுள்ளார் கௌரி.

Advertisement