2009 ஆம் ஆண்டு சிவஸ்ரீ சீனிவாசன் தயாரிப்பில் பாலா இயக்கத்தில் வெளிவந்த படம் தான் நான் கடவுள். இந்த படத்தில் ஆர்யா,பூஜா, மெட்டை ராஜேந்திரன் மற்றும் படத்தில் பலர் நடித்திருப்பார்கள். மேலும் இந்த திரைப்படத்திற்கு இளையராஜா அவர்கள் இசையமைத்திருப்பார்.பிரபல எழுத்தாளர் ஜெகன்மோகன் இந்த படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். இந்த படத்தின் சண்டைக் காட்சிகளை சூப்பர் சுப்பராயன் அவர்கள் அமைத்து இருக்கிறார்.
மேலும் இந்த படம் 2009 ஆம் ஆண்டு வெளியானபோது தமிழகம் முழுவதும் 21 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்தது. நான் கடவுள் திரைப்படம் சூட்டிங் எடுத்து முடித்து நான்கு ஆண்டுகள் கழித்து தான் திரைக்கு வந்தது நான் கடவுள் திரைப்படம் ஏழாம் உலகம் என்ற புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இப்படத்தில் நடிகர் ஆர்யாவின் அப்பாவாக நடித்திருந்தவர் தான் அழகன் தமிழ்மணி.
தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி :
அழகன் தமிழ் மணி மலையாள சினிமாவில் பல திரைப்படங்களை தயாரித்த இவர் நான் கடவுள் திரைப்படத்தில் நடிகர் ஆர்யாவின் அப்பாவாக நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது ஒரு ஊடகத்திற்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில் இயக்குனர் பாலாவை பற்றி கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். அதில் அவரிடம் ஏன் நீங்கள் இயக்குனர் பாலா இயக்கிய “நான் கடவுள்” திரைப்படத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்கவில்லை அதற்கான காரணம் என்னவென்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த தயாரிப்பாளர் தமிழ் மணி `பாலா படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று செல்லவில்லை பாலதான் என்னிடம் கேட்டார் அதற்கு நான் எனக்கு நடிக்க தெரியாது என்றதற்கு நடிக்கத்தெரியாதவர்கள் தான் வேண்டும் என்றார். அப்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த பிறகு படத்திற்காக தாடி மற்றும் மீசை வளர்க்க சொன்னார்கள். அதற்கு பிறகுதான் தெரிகிறது பாலா ஒரு சாடிட்ஸ் என்று.
பல கஷ்டங்களை தாண்டித்தான் இந்த படத்தில் நடித்திருந்தேன். இப்படம் 3 வருடங்களாக எடுக்கப்பட்டது. படத்தின் தொடர்ச்சிக்காக 3 வருடம் தாடி மீசையுடன்தான் இருந்தேன். எங்களுடைய தேவர் சமூகத்தில் தாய் இறந்தால் கொல்லி போடும் பிள்ளை மொட்டை அடித்து மீசை எடுத்துதான் கொல்லி சட்டி தூக்க வேண்டும். மேலும் என்னுடைய அம்மாவிற்கு நான் ஒரே பையன். இதனால் பலரும் இதற்காக பாலாவிடம் பேசியிருந்தோம்.
தாயின் இறுதி சடங்கிற்கு கூட விட வில்லை :
ஆனால் இயக்குனர் பாலா அவர் மீசை தாடி எடுத்து விட்டால் இந்த படம் எடுக்க இன்னமும் 3 வருடங்கள் ஆகும். அது சரி என்றால் அவரை தாடி எடுக்க சொல்லுங்கள் என்று கூறினார். ‘பாலாவை விட்டால் இன்னனும் 3 வருடங்கள் எடுப்பான் அவருக்கென்ன நானும் ஒரு தயாரிப்பாளர் தான் எனவே எனக்கு ஒரு தயாரிப்பாளரின் கஷ்டம் தெரியும் அதனால்தான் நான் என்னுடைய தாய் இறுதி சடங்கிற்க்கு மொட்டையடிக்காமல் மீசை எடுக்காமல் கொல்லி வைத்தேன் என்று அழுதபடி கூறியிருந்தார்.
நான் சாபம் கொடுத்தேன் :
அப்போது என்னுடைய நெஞ்சு எரிவதை போல ஒருகாலத்தில் நீ கஷ்டபடுவாய் என்று அவனுக்கு சாபம் விட்டேன். அதனால் தான் இன்று பாலா இந்த நிலைமைக்கு உள்ளன். அதற்கு பிறகு எத்தனை படம் எடுத்தான்? என்னத்தை கிழித்தான்?. இப்போது வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் இருக்கிறான் பாலா. காரணம் நீ மற்றவர்களுக்கு செய்த கொடுமை தான் உன்னை இந்த நிலைக்கு உள்ளாக்கியுள்ளது. என்று கூறி அவர் இயக்குனர் பாலாவின் இந்த குணத்தை நீ மாற்றிக்கொள் இது நான் உனக்கு சொல்லும் பாடமல்ல சாபம் என்றே வைத்துக்கொள். ஏனென்றால் எனக்கு அப்போது அந்த அளவிற்கு வயிறு எரிந்தது என்று உருக்கமாக கூறியிருந்தார் தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி.