2009 ஆம் ஆண்டு சிவஸ்ரீ சீனிவாசன் தயாரிப்பில் பாலா இயக்கத்தில் வெளிவந்த படம் தான் நான் கடவுள். இந்த படத்தில் ஆர்யா,பூஜா, மெட்டை ராஜேந்திரன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பலர் நடித்திருப்பார்கள். மேலும் இந்த திரைப்படத்திற்கு இளையராஜா அவர்கள் இசையமைத்திருப்பார்.பிரபல எழுத்தாளர் ஜெகன்மோகன் இந்த படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். இந்த படத்தின் சண்டைக் காட்சிகளை சூப்பர் சுப்பராயன் அவர்கள் அமைத்து இருக்கிறார். மேலும் இந்த படம் 2009 ஆம் ஆண்டு வெளியானபோது தமிழகம் முழுவதும் 21 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்தது. நான் கடவுள் திரைப்படம் சூட்டிங் எடுத்து முடித்து நான்கு ஆண்டுகள் கழித்து தான் திரைக்கு வந்தது நான் கடவுள் திரைப்படம் ஏழாம் உலகம் என்ற புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

ஈன்ற மகவால் குலத்துக்கு இழப்பு என சோதிடர்கள் கூறியதை நம்பி மகன் ருத்ரனை சிறுவயதிலேயே காசியில் கொண்டுவந்து விடுகிறார் அப்பா நமச்சிவாயம். பதினான்கு ஆண்டு நீண்ட இடைவெளிக்குப் பின் குற்றவுணர்வு துரத்த மகனைத் தேடி காசிக்கு வருகிறார். பாவம் கரைக்கவரும் மக்கள் ஆற்றில் எரியும் சிதைக்கு நடுவே தவக்கோலத்தில் மகனைக் கண்டுபிடிக்கிறார். ருத்ரன் இப்போது சுற்றம் துறந்த அகோரித் துறவியாக உள்ளான். ஊருக்கு வந்த பிறகும் வீட்டோடு ஒட்டாமல் இருக்கிறான். இது அவனது உறவுகளுக்கு மன வருத்தம் தந்தாலும், அவன் மீண்டும் தங்களுடன் சேர்ந்து வாழ மாட்டான் என்பதை உணர்ந்து அவனை விட்டு விடுகிறார்கள். உடல் ஊனமுற்றவர்களையும் மூளை வளர்ச்சி குறைந்தவர்களையும், உறவற்றவர்ளையும் பிச்சைக்காரர்களாக்கி தொழில் செய்து வருகிறான் தாண்டவன். அவனிடம் சிக்கிக் கொள்கிறாள் பாட்டுப் பாடி பிழைப்பு நடத்தும் கண் தெரியாத அம்சவல்லி. தாண்டவன், முக அழகு குறைந்த ஒருவனுக்குஅவளை விற்க முயல்கிறான். பாதுகாப்பு தேடி அவள் வந்து சேரும் இடம் ருத்ரன் இருக்கும் மலைக்கோயில்.இவர்களை ஆர்யா காப்பாற்றுவார இல்லையா என்பதே கதை.

நான் கடவுள் பட வாய்ப்பு :-
இப்படி இந்த படத்தில் உடல் ஊனமுற்றவர்களாக நடிக்கும் ஒரு 20, 25 பேரில் ஒருவர் தான் கார்த்தி. அவர் படத்தில் ஊனமுற்றவர் ஐயப்பன் வேடம் அணிந்திருப்பார் அவர் தான் நம் கார்த்தி. அவரின் தற்போதைய நிலை என்ன ? இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் ?என்று இந்த செய்தி தொகுப்பில் காணலாம். கார்த்தி கூறுகையில் நாங்கள் அனைவரும் உடல் ஊனமுற்றவர்கள் என்ற அமைப்பில் உறுப்பினராக இருந்து வந்தோம். அங்கு வந்த இயக்குனர் பாலா அவர்கள் திரைப்படம் எடுப்பதற்கு ஆட்கள் தேவை என்று கூறினார். எங்கள் அனைவரின் வீட்டிலும் நடிப்பதற்காக அவர்களே பேசி சம்மதம் வாங்கிக்கொண்டு. எங்கள் அனைவரையும் அப்படியே மொத்தமாக நான் கடவுள் படத்தில் நடிப்பதற்கு அனுப்பி வைத்தார்கள்.
https://www.youtube.com/watch?v=DjNIpvYS86s
நாங்கள் தான் பாலா அவர்களின் செல்ல பிள்ளை :-
நான் படம் சூட்டிங்கு சென்றபோது ஸ்கூல் படிக்கும் சிறுவனுக்கு பள்ளியில் விடுமுறை விட்டால் எப்படி இருக்குமோ அது போல தான் ஸ்கூலுக்கு செல்லாமல் நடிப்பதற்கு சென்றவுடன் ஜாலியாக இருந்து. மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குனர் பாலா அவர்கள் எங்களிடம் மிகவும் அன்பாக நடந்து கொள்வார் சாப்டியா எப்படி இருக்கிறாய் என்றெல்லாம் கேட்பார். நானும் அங்கு உடல் ஊனமுற்றவர்கள் இருவர் படத்தில் படுத்தார் போல இருப்பார்கள். நாங்கள் மூவரும் நண்பர்களாக மாறிவிட்டோம் இயக்குனர் பாலா அவர்களுக்கு நான் கடவுள் படத்தின் பொழுது நாங்கள் மூவர் தான் செல்ல பிள்ளைகள் போல். எப்பொழுதும் அவர் ஒரு சோபாவில் அமர்ந்து இருப்பார் பக்கத்திலேயே எங்களுக்கு ஒரு சோபா போட்டு இருப்பார்கள் நாங்களும் அவர் அருகே அமர்ந்திருப்போம் அவருக்கும் தனியாக ஸ்நாக்ஸ் எல்லாம் வந்துவிடும் எங்களுக்கும் தனியாக ஸ்நாக்ஸ் ஜூஸ் எல்லாம் வந்துவிடும் இப்படியாகத்தான் ஷூட்டிங் சென்று கொண்டிருந்தது.
மைமில் இன்டர்நெஷனல் வரை போய்யிருக்கேன் :-
பின்பு பட சூட்டிங் முடிந்ததும் வீட்டிற்கு வந்துவிட்டேன் மேலும் பல பட வாய்ப்புகள் வந்தபொழுது இப்பொழுதே இவன் வீட்டில் இல்லை எங்கே நம்மளை விட்டு பிரிந்து சசென்று விடுவானோ என்ற பயத்தில் எனது பெற்றோர்கள் அதை தவிர்த்து விட்டனர். ஒரு வருடங்கள் கழித்து டப்பிங் செய்வதற்காக என்னை அழைத்துச் சென்றார்கள் அப்பொழுது அங்கே இருந்து இளையராஜா சாருடன் பேசி போட்டோ எடுத்துக் கொண்டோம். அதன் பின்பு திரைப்பட வாய்ப்புகள் மீது பெரிதாக கவனம் செலுத்தவில்லை. பின்பு மைம் எனப்படும் ஊமை நாடகம் நடிக்க ஆரம்பித்து அதையே என் வாழ்க்கையாக ஆக்கிக் கொண்டேன். இந்த மைம் நாடகம் மூலம் நேஷனல்,ஏசியன், இன்டர்நேஷனல் போன்ற அனைத்து பிரிவுகளிலும் கலந்து கொண்டு பரிசுகள் பெற்று இருக்கிறோம்.

மீன்டும் திரைபடம் வாய்புக்காக செல்வேன் :-
இப்பொழுது கூட ஒரு மைம் நாடகம் நடித்துவிட்டு தான் வந்திருக்கிறேன். இன்னும் சிறிது நாட்கள் இந்த துறையில் பயணித்து நன்றாக கால் ஊன்றிய பிறகு மறுபடியும் சினிமா வாய்ப்பு தேடி செல்லலாம் என்று இருக்கிறேன். மேலும் சமீபத்தில் இயக்குனர் பாலா ஷூட்டிங்கின் போது அனைவரையும் அடிப்பார், துன்புறுத்துவார் என்பது போல செய்திகள் வந்தனர். அவர்கள் கூறியது உண்மையா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இயக்குனர் பாலா எங்களிடையே ஒரு பாசமானவராக அன்பானவராக மட்டுமே இருந்தார். மேலும் உங்களுடன் நடித்தவர்களுடன் தொடர்பில் உள்ளீர்களா என்று கேட்ட பொழுது. கார்த்தி அந்த படம் எடுத்து பல வருடம் ஆகிவிட்டது யாருடைய தொடர்பில் இல்லை. யார் இப்போது என்ன செய்கிறார்கள் ? எங்கு இருக்கிறார்கள்? என்ற ஒன்றுமே தெரியாது. சிலர் இறந்துவிட்டன என்று செய்திகள் வந்தன. அண்ணா நம்மிடையே அனைத்தையும் பகிர்ந்து கொண்டார் நான் கடவுள் நடிகர் கார்த்தி.





