ஹீரோயின் இதனால் தான் என்ன பாத்து பயப்படுவாங்க, நீங்க வேற எதனா title போட்ற போறீங்க – பல ஆண்டு கழித்து நடிக்க வந்த நடிகையை கலாய்த்த சசி குமார்.

0
425
sasi
- Advertisement -

நான் மிருகமாய் மாற படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் கிண்டலாக சசிகுமார் பேசியிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் சசிகுமார். இவர் தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். தமிழில் சசிகுமார் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த படம் சுப்ரமணியபுரம். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்து இருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தின் மூலம் தான் சசிகுமார் இயக்குனராகவும், நடிகராகவும் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். இந்த திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படமாக பல்வேறு விருதுகளை அள்ளிக் குவித்து இருந்தது. அதன் பின்னர் சசிகுமார் ஈசன் என்ற படத்தை இயக்கியிருந்தார். இதற்கு பிறகு இவர் இயக்குவதை விட்டு தொடர்ச்சியாக ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார். சமீபத்தில் சசிகுமார் நடிப்பில் எம்ஜிஆர் மகன், ராஜவம்சம் போன்ற படங்கள் வெளியாகி இருந்தது.

- Advertisement -

சசிகுமார் திரைப்பயணம்:

தற்போது இவர் வச்ச சிங்கம்டா, பரமகுரு, காரி போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். பின் இவர் குற்றப்பரம்பரை என்ற நாவலை இயக்க இருக்கிறார். பிரபல எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி எழுதிய நாவல் தான் குற்றப்பரம்பரை. இந்த நாவல் மிகவும் பிரபலமானது. இந்த நாவலை படமாக்க தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான பாரதிராஜா மற்றும் பாலா ஆகியோர் முயற்சி செய்திருந்தனர். பின் பல பிரச்சனைகளுக்கு பின் அந்த முயற்சி கைவிடப்பட்டது. தற்போது சசிகுமார் இந்த படத்தை இயக்க இருக்கிறார்.

இயக்குனராக ரீ என்ட்ரி கொடுக்கும் சசிகுமார்:

இதில் நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்தின் மகன் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். மேலும், சுப்ரமணியபுரம், ஈசன் போன்ற படங்களை இயக்கிய சசிகுமார் 12 ஆண்டுகளாக எந்த ஒரு படத்தையும் இயக்காமல் நடிப்பில் கவனம் செலுத்தி வந்திருந்தார். தற்போது குற்றப்பரம்பரை மூலமாக இயக்குனராக ரீ என்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் நான் மிருகமாய் மாற. கழுகு படத்தை இயக்கிய இயக்குனர் சத்யா சிவா தான் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் சசிகுமார் உடன் ஹரிப்ரியா, விக்ராந்த் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

நான் மிருகமாய் மாற படம்:

இந்த படத்தை சஞ்சய் குமார் தயாரித்திருக்கிறார். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படம் வருகிற 18ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் பிரஸ்மீட் நடைபெற்று இருக்கிறது. படக்குழுவினர் கலந்து கொண்டு உரையாடி இருந்தார்கள். அதில் சசிகுமார் அவர்கள் கூறியிருப்பது, ரொம்ப நாள் கழித்து சந்திக்கிறோம். இனிமேல் அடிக்கடி சந்திக்கலாம். வரிசையாக படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இது முழுக்க முழுக்க வைலண்ட் மூவி. இந்த படத்தை அழகாக இயக்குனர் எடுத்திருக்கிறார்.

சசிகுமார் அளித்த பேட்டி:

இந்த படத்தில் நடிக்கவில்லை என்றால் வழக்கம் போல் கிராமத்தில் வேட்டி கட்டி கொண்டு நடந்து கொண்டு இருப்பது போன்ற படத்தில் நடித்துக் கொண்டிருப்பேன். இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. அதேபோல் நான் நடித்திருக்கும் காரி படமும் அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது. ஜிப்ரான் சாருடைய இசை ரொம்ப அற்புதமாக இருக்கிறது. இந்த படத்தில் பாட்டு, நடனம் எதுவும் வைக்கவில்லை. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. பின்னணி இசை அற்புதமாக பண்ணியிருக்கிறார். ஒலிப்பதிவாளரின் வாழ்க்கை படம் என்பதால் அது சார்ந்த சத்தத்துடனே இசை அமைக்க இயக்குனர் வேண்டுகோள் வைத்தார். அது சவாலாக இருந்தது என்று கூறியிருக்கிறார்.

Advertisement