லியோ படத்தில் இடம்பெற்ற நான் ரெடி பாடலின் தெலுங்கு மற்றும் மலையாள வெர்சனின் கிண்டல் பதிவு தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. மாஸ்டர் படத்தின் கூட்டணிக்கு பிறகு தற்போது லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் லியோ படம். இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
https://twitter.com/Zeyy_X24/status/1712869704824668317
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிவடைந்து இருக்கிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால் படத்தினுடைய ப்ரமோஷன் பணிகள், போஸ்டர் பணிகள் எல்லாம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், அனைவரும் எதிர்பார்த்த லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா மக்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக நடத்த வேண்டாம் என படக்குழு முடிவெடுத்திருந்ததாக கூறப்பட்டது.
https://www.youtube.com/watch?v=NwVyWyZ8nY0
லியோ படம்:
இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இருந்தாலும், லியோ ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உலகம் முழுவதும் 25000-30000 திரையரங்கில் படம் வெளியாக இருக்கிறது. இன்னும் படம் ரிலீசாக சில தினங்கள் இருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பும், ஆரவாரமும் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் படத்திற்கான ப்ரீ புக்கிங் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை லியோ படத்திற்கு இந்தியா, வெளிநாடுகளிலும் முன் பதிவு டிக்கெட் கோடி கணக்கில் விற்று இருப்பதாக கூறப்படுகிறது.
நான் ரெடி தான் பாடல்:
இது ஒரு பக்கம் இருக்க, லியோ படத்தில் வெளிவந்த முதல் பாடல் நான் ரெடி தான். இந்த பாடலுக்கு 1300 நடன கலைஞர்களை வைத்து விஜய் நடனமாடிருந்தார். இந்த பாடலானது கடந்த ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளன்று வெளியானது. இந்த பாடலை விஜய்யே பாடியிருந்தார், இதனால் பாடல் வெளியான போது யூடியூபில் படு பேமஸ் ஆகி இருந்தது. ஆனால் இந்த பாடலில் புகைபிடிக்கும் படியான கட்சிகளும், மது அருந்துவதை பற்றிய வாசகங்களும் இடம்பெற்றிருந்தது சமூக ஆர்வலர்கள் இடையே பெரும் எதிர்ப்பை உருவாக்கியது.
View this post on Instagram
பாடல் குறித்த சர்ச்சை:
பாமாக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்களும் விஜய் இந்த மாதிரியாக புகைபிடுக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் அறிவுரை கூறியிருந்தனர். குறிப்பாக, அனைத்து மக்கள் கட்சி தலைவர் ராஜேஷ்வரி பிரியா விஜய் மீது நடக்கடிக்கை எடுக்க கோரி புகார் மனு ஒன்றை கொடுத்து இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதை அடுத்து நீதிமன்றமும் நான் ரெடி தான் பாடலில் உள்ள மோசமான வரிகளை நீக்கி வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
View this post on Instagram
ரசிகர்கள் விமர்சனம்:
அதன் பின் நான் ரெடி தான் பாடலுக்கு நடனமாடிய நடன கலைஞர்களுக்கு சம்பளம் பாக்கி தரவில்லை என்று நடன கலைஞர் ஒருவர் பேட்டியில் கூறி இருந்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. ஒரு வழியாக பிரச்சனை முடிந்தது என்று நினைக்கும் போது தற்போது ஒரு புது தலைவலி வந்து இருக்கிறது. அதாவது, நான் ரெடி பாடலின் தெலுங்கு மற்றும் மலையாளம் வெர்சன் வெளியாகி இருக்கிறது. இதை பாரத ரசிகர்கள் பலரும் கிண்டல் செய்து விமர்சித்து வருகிறார்கள். தற்போது சோசியல் மீடியா முழுவதும் லியோ பாடல் கிண்டல் பதிவு தான் அதிகமாக இருக்கிறது.





