பாலாவின் நாச்சியார் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் ! அதிக வசூலில் இதுவே முதல் முறை

0
5628
Naachiyaar movie

ஜோதிகா, ஜி.வி பிரகாஷ், இவானா நடிப்பில் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் உருவான படம் நாச்சியார். உலகம் முழுவதும் நேற்று திரைக்கு வந்த இந்த படம் தற்போது வரை பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.

naachiyaar-poster

படத்தின் கதைகருவில், பெண்களுக்கு எதிராக தொடரும் பாலியல் வன்முறை குறித்து அழகாக எடுத்து கூறியுள்ளது. பொதுவாக பாலா படங்கள் இயல்பு வாழ்க்கையை ஒட்டிய ஒரு எதார்த்தமான படமாக இருக்கும். ஆனால் இந்த முறை அந்த எதார்த்தத்தை சேர்த்து கமர்சியலாக எடுத்து நமக்கு அளித்திருக்கிறார் பாலா.எப்போதும் பாலாவின் படங்கள் நல்ல ரிவ்யூக்கள் பெற்று விமர்சகர்களின் தாகத்தை தீர்த்தாலும் கமர்சியலாக வெற்றி பெறாது எனறு பேச்சு இருந்தது. அந்த பேச்சினை இந்த படம் தகர்த்துள்ளது.

சென்னை பாக்ஸ் ஆபீசில் முதல் நாளில் மட்டும் நாச்சியார் படம் 30 லட்சம் வசூல் செய்துள்ளது. பாலாவின் படங்கள் முதல் நாளில் சென்னையில் மட்டும் இவ்வளவு வசூல் செய்வது இதுவே முதல்முறை. இதனால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது.