நாச்சியார் – வெளிநாட்டு ரசிகர்கள் கூறும் விமர்சனம் !

0
11322
naaciyaar review

இயக்குனர் பாலா இயக்கத்தில் ஜோதிகா, நடிகர் ஜீ.வி பிரகாஷ் மற்றும் புதுமுகம் இவானா ஆகியோர் நடிக்க இன்று திரைக்கு வரவுள்ள படம் நாச்சியார். இயக்குனர் பாலாவின் படம் எனப்பதால் இந்த படத்தில் ஜோதிகவிற்கு வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய காட்சிகளாலும் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

வெளிநாடுகளில் தற்போது பிரிமியர் ஷோ முடிந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கிறது. பாலாவின் பொதுவான சமூக அவலநிலை குறித்த படமாக இது இருந்தாலும், அவருடைய கதைநோக்கம் இந்த படத்தில் மாறியுள்ளதாக தெரிகிறது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அற்புதமாக வைக்கப்பட்டு இரண்டாம் பாகத்திற்கும் சுழி போடப்பட்டுள்ளது.

ஜோதிகா எப்போதுமே எவர்க்ரீன், வித்யாசமாக நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் அற்புதம். புதிய முகம் இவானா நல்ல கண்டுபிடிப்பு. பாலாவின் இந்த படம் ஹிட் படமாக அமையும்.