திடீர் திருமணம் முடித்த நாதஸ்வரஸம் சீரியல் நடிகை – லவ் மேரேஜா அரேஞ் மேரேஜா ? புதுமண தம்பதியின் பேட்டி.

0
181
sruthi
- Advertisement -

சமீப காலமாகவே சின்னத்திரைப் பிரபலங்கள் பலருக்கு திருமணம் நடைபெற்று வருகிறது. அதிலும் சீரியலில் ரீல் ஜோடிகளாக இருந்தவர்கள் நிஜவாழ்க்கையில் ரியல் ஜோடிகளாக மாறிவிடுகிறார்கள். ஷபானா – ஆர்யன், மதன் – ரேஷ்மா, சித்து- ஸ்ரேயா இவர்களைத் தொடர்ந்து தீபக்- அபிநவ்யா ஆகியோர் திருமணம் செய்து கொண்தார்கள். இந்த வரிசையில் தற்போது ஸ்ருதி சண்முக பிரியன் திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

-விளம்பரம்-

இவர் 1993 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்தவர். இவர் பள்ளிப் பருவம் படித்துக் கொண்டிருக்கும்போதே சீரியலில் நடிக்கும் பல வாய்ப்புகள் வந்தது. இவர் நாதஸ்வரம் சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்கு அறிமுகமானார். இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான தொடர் தான் நாதஸ்வரம். இந்த தொடரை திருமுருகன் எழுதி இயக்கி நடித்தும் இருந்தார். இந்த தொடரில் பலர் நடித்து இருந்தார்கள். குடும்ப உறவுகளின் கதையை மையமாகக் கொண்டது தான் இந்த தொடர்.

- Advertisement -

ஸ்ருதி சண்முக பிரியன் சின்னத்திரை பயணம்:

இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அந்த தொடருக்குப் பின்னர் சுருதி பொன்னூஞ்சல், கல்யாண பரிசு, வாணி ராணி போன்ற பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். அதேபோல ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி திரைப்படத்தில் கூட நடித்திருக்கிறார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்று கொண்டு வரும் பாரதி கண்ணம்மா தொடரில் கூட சுருதி நடித்து இருந்தார்.

பூச்சூடல் விழா :

கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி ஸ்ருதிக்கும், அரவிந்த் சேகர் என்பவருக்கும் பூச்சூடல் விழா நடைபெற்றது. இதுகுறித்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் ஸ்ருதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்பதிவிட்டிருந்தார். பின் அதில் இது எங்களுடைய பூச்சூடல் விழா புகைப்படம். சீக்கிரமே நிச்சயதார்த்தம் மற்றும் திருமண தேதிகளை அறிவிக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார். இதை பார்த்து சின்னத்திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி இருந்தார்கள்.

-விளம்பரம்-

திடீர் திருமணம் :

அதுமட்டும் இல்லாமல் சீரியலில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த ஸ்ருதி தற்போது குட்டி பிரேக் எடுத்திருக்கிறார். இந்த நிலையில் இவருக்கு திடீர் திருமணம் நடைபெற்று இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சுருதி ‘பலரும் எங்களுடையது காதல் திருமணம் என்று நினைத்திருக்கிறார்கள். ஆனால், எங்களுடைய பக்கா அரேஞ்ச் மேரேஜ்.இருவீட்டார் சம்மத்துடன் நடைபெற்றது.

முதல் பரிசு :

கல்யாணத்துக்கு முன் அரவிந்த் சர்ப்ரைஸாக என் கண்ணை அவர் கையில் டாட்டூவாக குத்தி வந்திருந்தார். அதுதான் அவருடைய முதல் டாட்டூ அதை பார்த்ததும் என்னை அறியாமலேயே கண் கலங்கிவிட்டது. கல்யாணத்திற்கு பின்னர் தினம் தினம் அதிகமான காதல், பரிசு என்று வாழ்க்கையை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

Advertisement