அந்த ஒரு சீரியலை நம்பி எப்படி. ராஜா ராணி சீரியலில் இருந்து விலகியது ஏன்? காரணம் சொல்லும் கீதாஞ்சலி.

0
63317
- Advertisement -

சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை கீதாஞ்சலி. இவர் நாதஸ்வரம் என்ற சீரியலில் ஹீரோவும், இயக்குனருமான திருமுருகனின் காதலி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த முதல் சிரியலிலேயே இவருக்கு மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. நடிகை கீதாஞ்சலி காரைக்குடியை பூர்வீகமாக கொண்டவர். நாதஸ்வரம் சீரியல் ஷூட்டிங் காரைக்குடியைச் சுற்றி உள்ள இடங்களில் நடந்ததால் வீட்டிலிருந்தே வந்து சூட்டிங்கில் கலந்து கொண்டார் கீதாஞ்சலி. நாதஸ்வரம் சீரியலை தொடர்ந்து இவருக்கு அடுத்து அடுத்து சீரியலில் நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தன.

-விளம்பரம்-

இதனால் இவர் சென்னையிலேயே தன் அம்மாவை அழைத்துக் கொண்டு வந்து தங்கினார். பின் கீதாஞ்சலி அவர்கள் சினிமாவில் கூட சில படங்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு இவர் நடித்து வந்த “வாணி ராணி” சீரியல் வெற்றிகரமாக முடிவு அடைந்தது. உடனடியாக இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான “நிறம் மாறாத பூக்கள்” என்ற சீரியலில் கமிட் ஆனார். அதே சமயத்தில் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலிலும் கீதாஞ்சலி கமிட்டானார். இந்த இரண்டு சீரியல்களின் சூட்டிங் நாட்கள் ஒரே நேரங்களில் நடைபெறுவதால் இரண்டு சீரியலிலும் நடிக்க சில பிரச்சனைகள் ஏற்பட்டது.

- Advertisement -

மேலும், தொடர்ந்து இந்த 2 சீரியல்களில் நடிக்க பல பிரச்சனைகள் ஏற்பட்டதால் நடிகை கீதாஞ்சலி அவர்கள் ராஜா-ராணி-சீரியல் இருந்து விலகி விட்டார். பின் நிறம் மாறாத பூக்கள் என்ற தொடரில் மட்டும் நடித்து கொண்டு வந்தார். அதோடு சில மாதங்களுக்கு முன்பு தான் இந்த நிறம் மாறாத பூக்கள் தொடரும் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு கீதாஞ்சலி அவர்களுக்கு அவ்வளவாக சினிமாக்களும், சீரியல் வாய்ப்புகள் அமையவில்லை என்ற உடன் சென்னையிலிருந்து வீட்டை காலி செய்து கொண்டு தன்னுடைய சொந்த ஊருக்கு சென்று விட்டார்.

இது குறித்து அவரிடம் கேட்ட போது கீதாஞ்சலி கூறியது, எப்பவுமே பிரபலமான ஆர்ட்டிஸ்டுகள் இரண்டு சீரியல்களில் நடிக்கும் போது பல பிரச்சனைகள் வரும். ஆனால், அவர்களுக்கான நேரங்களை ஒதுக்கி அட்ஜஸ்ட் பண்ணிக்குவாங்க. ஆனால், புது முக ஆர்ட்டிஸ்டுகள் இருந்தால், அதுவும் அவங்களுக்கு ரெண்டு சீரியல் கிடைத்தால் கால்ஷீட் குழப்பம் வரும், நேரம் கிடைக்காது. அதனால், அவர்கள் ஒரு சீரியலில் இருந்து எப்படியாவது நடிப்பதை தவிர்த்து விடவேண்டும். அவர்களுக்கான அட்ஜஸ்ட்மெண்ட்டை யாரும் பண்ண மாட்டாங்க.

-விளம்பரம்-

அது மட்டும் இல்லாமல் ஒரே ஒரு சீரியலில் நடித்து கொண்டு எப்படிங்க சென்னையில் வாழ முடியும். அதனால் தான் என்னுடைய சொந்த ஊர் காரைக்குடிக்கு வந்து விட்டேன். சமீபத்தில் தான் என்னுடைய தங்கைக்கு திருமணம் ஆகி விட்டது. அதனால் 2020 ஆம் ஆண்டு எனக்கு திருமணம் ஆகிவிடும். அதற்கான ஏற்பாடுகளை எல்லாம் எங்கள் வீட்டில் செய்து கொண்டு வருகிறார்கள். அதோடு மார்கழி மாதம் முடிந்ததும் திருமண வேலைகள் ஆரம்பித்து விடுவார்கள். சென்னையில் நடிப்பதாக இருந்தால் திருமணத்திற்கு பிறகு தான் நான் வருவேன் என்றார் கீதாஞ்சலி.

Advertisement