நர்ஸ் வேலையை விட்டுவிட்டு நடிப்பு, 30 நாளில் இறந்த மகன் – நாதஸ்வரம் சீரியல் நடிகையின் அறிந்திராதா மறு பக்கம்.

0
1958
nadas
- Advertisement -

மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்குகின்றது. அதிலும் சன் டிவி சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றாக திகழ்வது நாதஸ்வரம். இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான தொடர் தான் நாதஸ்வரம். இந்த தொடரில் பலர் நடித்தும் இருந்தார்கள். இந்த தொடர் குடும்ப உறவுகளின் கதையை மையமாகக் கொண்டது. இந்த தொடர் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

-விளம்பரம்-

மேலும், இந்த தொடரில் மகேஷ் என்ற கதாபாத்திரத்தின் மூலம் சின்னத்திரையில் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரேவதி தாமோதரன். இதனை அடுத்து இவர் கல்யாண வீடு என்ற தொடரிலும் நடித்து இருந்தார். அதற்கு பின்பு இவர் திருமணமாகி குடும்பத்துடன் செட்டிலாகிவிட்டார். குழந்தைகளுக்காக சின்னத்திரை தொடரில் இருந்து ரேவதி பிரேக் எடுத்திருந்தார். தற்போது இவர் நடிப்பதற்கு தயாராக இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் பிரபல சேனல் அவரிடம் பேட்டி எடுத்தது. அதில் அவர் கூறியிருந்தது, எங்க குடும்பத்தில் யாரும் மீடியா பின்புலம் கிடையாது.

- Advertisement -

நடிகை ரேவதி தாமோதரன் அளித்த பேட்டி:

மதுரையில் வடமலையான் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து கொண்டிருந்தேன். அப்போ ஒரு விளம்பரத்தில் நடிப்பதற்காக கூப்பிட்டார்கள். அங்கிருந்து தான் ஷார்ட் பிலிம்களில் நடிக்கிற வாய்ப்பு கிடைத்தது. அதற்குப் பின் எனக்கே ஆக்டிங் மீது ஆர்வம் வந்தது. அதனால் ஆடிஷனில் கலந்து கொள்ள ஆரம்பித்தேன். மேலும், ஆடிசன் மூலமாக தான் சுந்தரபாண்டியன் படம் வாய்ப்பு கிடைத்தது. அப்பத்தான் நாதஸ்வரம் சீரியல் வாய்ப்பும் அமைந்தது. எங்கள் வீட்டில் நடிக்கப் போறேன் என்று சொன்னதும் ரொம்பவே திட்டினார்கள். அம்மாவும், அக்காவும் தான் உனக்கு ஆர்வம் இருந்தால் நீ முயற்சி பண்ணு இப்போதைக்கு அப்பாகிட்ட சொல்ல வேண்டாம் என்று சொன்னார்கள்.

சீரியல் அனுபவம் குறித்து சொன்னது:

நாதஸ்வரம் தொடரில் நடிக்கும் போது தான் நான் நடிக்கிறேன் என்று என் அப்பாவுக்கு தெரிந்தது. அந்த சமயம் அப்பா கொஞ்சம் கோபமாக இருந்தார். பின் சமாதானமாகி விட்டார். நாதஸ்வரம் சீரியலில் மகேஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்தேன். எனக்கு முன்னாடி ஏற்கனவே அந்த கதாபாத்திரத்தில் 4 பேர் நடித்திருந்தார்கள். ஐந்தாவது ஆளாக தான் நான் நடித்தேன். 6 மாதம் அந்த சீரியலில் நான் அழுது கொண்டே இருக்கிற மாதிரிதான் இருந்தது. அதோடு நான் சீரியலுக்கு முன் சின்ன சின்ன விஷயங்களில் நடித்திருந்தேன். எனக்கு பெரிய அளவில் நடிப்பு பற்றி எல்லாம் தெரியாது.

-விளம்பரம்-

நடிப்பு குறித்து ரேவதி சொன்னது:

நேச்சுரல் ஆகவே நான் கொஞ்சம் அமைதியான கதாபாத்திரம் என்பதால் முதல் ஆறுமாதம் எப்படியோ அழுதுகொண்டே சமாளித்து விட்டேன். அடுத்தடுத்து அந்த கதாபாத்திரம் கொஞ்சம் மாற ஆரம்பித்தது. எல்லோரையும் எதிர்த்து பேசுற மாதிரி இருந்தது. என் முகத்தில் கோபமே வராது. ஆனால், அந்த டயலாக் ரொம்ப கோவமாக பேசுற மாதிரி எல்லாம் இருக்கும். எங்க யூனிட்டில் எப்பவும் ஒரு நாள் 6,7 சீன் எடுத்து விடுவார்கள். அன்னைக்கு நான் திட்டுற மாதிரி ஒரு சீனை காலையில் இருந்து மாலை வரை எடுத்துக்கொண்டே இருந்தார்கள்.

காதல் திருமணம் குறித்து சொன்னது:

அன்னைக்கு ஸ்பாட்டில் இயக்குனர் திருமுருகன் சார் வேற இல்லை. என் மீது கோபவப்பட்டார்கள். எனக்கு அழுகை வந்து விட்டது. நமக்கு நடிப்பு வரவில்லை. நம்மால் ஏன் மத்தவங்களை கஷ்டப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். பின் இயக்குனர் சார் போன் பண்ணி என் கிட்ட பேசினார். பின் எல்லோரும் எனக்கு சின்ன சின்ன டிப்ஸ் கொடுத்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அந்த கதாபாத்திரத்திற்கு போக ஆரம்பித்தேன். அதற்குப் பிறகுதான் கேரக்டராகவே என்னை மாற்றிக் கொண்டேன். நாதஸ்வரம் சீரியலை பிறகு கல்யாண வீடு தொடரில் நடித்தேன். அதற்கு பிறகு எனக்கு வேறு வாய்ப்பு எதுவும் வரவில்லை. மேலும், ஒரு விளம்பர படத்தின் போது என் கணவரை சந்தித்தேன். பிறகு மருத்துவமனையில் அவரை சந்தித்தேன்.

மகன் இறப்பு:

இரண்டு பேரும் மீடியாவில் இருப்பதனால் எதார்த்தமாக போன் நம்பரை பகிர்ந்து கொண்டோம். அப்படியே பேச ஆரம்பித்து இரண்டு பேருக்கும் காதல் மலர்ந்தது. இரண்டு பேர் வீட்டுலயும் பேசிப் புரியவைத்து சம்மதம் வாங்கி திருமணம் செய்து கொண்டோம். எனக்கு ரெண்டு குழந்தைகளும் பையன் தான். சிசேரியன் பண்ணி 30 நாள் கழித்து தான் வீட்டுக்கு போனோம். திடீரென்று ஒருநாள் வயிறு வலிக்குது அழுதான் என்பதால் மருத்துவமனைக்கு போனோம். 24 மணி நேரத்தில் என்ன நடந்தது என்று தெரியவில்லை? என் மகன் இறந்துவிட்டான் என்று சொன்னார்கள். எதிர்பார்க்காத இழப்பு. ஆனாலும் இன்னைக்கு வரைக்கும் அவன் இல்லை என்கிற எண்ணம் எனக்கு தோணவில்லை. என்னுடன் தான் அவன் இருக்கிறான் என்று பல விஷயங்களை கூறி இருக்கிறார்.

Advertisement