நடிகர் சங்க தேர்தத்தில் வெற்றி பெற்றது யார் தெரியுமா ? தில்லு முல்லு என பாக்கியராஜ் அணி குற்றச்சாட்டு

0
1602
nadigar
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் உள்ள நடிகர்களுக்கு என்று ஒரு தனி சங்கம் இருக்கிறது. ஒவ்வொரு மொழியிலும் நடிகர் சங்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் விஜயகாந்த் தான் நடிகர் சங்கத்தின் முதல் தலைவராக இருந்தார். பின் 2015 ஆம் ஆண்டு தான் தேர்தல் பற்றி தெரிய வந்தது. அதுவரை நடிகர் சங்கத்தின் தலைவராக சரத்குமாரும், செயலாளராக ராதாரவியும் இருந்தார்கள். அதோடு நடிகர் சங்கத்திற்கு என பல ஆண்டு காலமாகவே கட்டிடம் கட்டும் திட்டம் இருந்து கொண்டிருக்கின்றது. இதனை எதிர்த்து நடிகர் சங்க கட்டிடம் கட்ட வேண்டும் என்று நடிகர் விஷால் பாண்டவர் அணி உருவாக்கினார். 2015 ஆம் ஆண்டு நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் ராதாரவிக்கு எதிராக விஷால் களமிறங்கினார்.

-விளம்பரம்-

பின் இரு அணிக்கும் இடையே வார்த்தை மோதல்கள் பயங்கரமாக உச்சகட்டத்தை எட்டி இருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மேலும், மாறி மாறி ஒருமையில் அழைப்பது நடந்தது. அதோடு ராதாரவி தரப்பில் களமிறக்கப்பட்ட சிம்புவும் விஷாலை நரி என்று தேர்தல் நேரத்தில் பேசி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மொத்தத்தில் பொது அரசியல்வாதி தேர்தலுக்கு நிகராக நடிகர் சங்கத் தேர்தல் இருந்தது. வெறும் 3 ஆயிரம் வாக்குகளை மட்டுமே கொண்ட நடிகர் சங்கத் தேர்தலுக்கு பார்க்களமே நடந்தது. இறுதியில் விஷால் அணி அனைத்து பதவிகளையும் பெற்று நாசர் தலைமையில் விஷால் செயலராக பதவி ஏற்றார்.

- Advertisement -

நடிகர் சங்கம் தேர்தல் பற்றிய விவரம்:

இந்த செயற்குழு பதவிக்காலம் முடிவடைந்து 2018 ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய தேர்தல் 2019 ஆம் ஆண்டு தாமதமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த முறை தேர்தல் ஆரம்பத்திலிருந்தே அமைதி கடைப்பிடிக்கப்பட்டது. விஷாலுக்கு எதிராக புதிய அணியை உருவாக்கியவர் ஐசரி கணேஷ். இவர்கள் நாங்கள் இன்னும் விரைவாக கட்டிடம் கட்டுவோம், விஷால் கட்டிடம் கட்டுவோம் என்று சொன்னதெல்லாம் பொய் என்று அவரை தாக்கி பேசி இருந்தார். ஐசரி கணேஷ் ஆதரவில் பாக்யராஜ் அணி போட்டியிட்டது. பின்னர் இரு தரப்பும் கொஞ்சம் கொஞ்சமாக பொறுமையை இழந்து போட்டியிட்டனர்.

தேர்தல் போது நடந்த பிரச்சனை:

வழக்கம் போல் வார்த்தைக்கு வார்த்தை என இரு அணிகளுமே கடும் போட்டி ஏற்பட்டது. பின் 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இருந்தாலும் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்ட உரிமையாளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. பின் பல்வேறு பிரச்சனைகள் எழுந்தது. இதைத்தொடர்ந்து இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த தேர்தல் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் தாக்குதல் செய்திருந்தார்கள். பின் இவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தொடர்ந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தேர்தல் விசாரித்தது வாக்குகளை எண்ண உத்தரவிட்டது.

-விளம்பரம்-

மீண்டும் வெற்றி பெற்ற பாண்டவர் அணி:

இதை எதிர்த்து ஏழுமலை என்ற துணை நடிகர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று பல போராட்டங்களுக்கு பிறகு சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள குட் ஷெப்பர்ட் பள்ளி வளாகத்தில் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இந்த ஓட்டு எண்ணிக்கை தேர்தல் அதிகாரி, நடிகர் சங்க தனி அதிகாரி, போட்டியிட்ட வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடந்தது. இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர் தலைமையில் போட்டியிட்ட விஷால், கார்த்தி, கருணாஸ் உள்ளிட்ட பாண்டவர் அணி மீண்டும் வெற்றி பெற்றனர்.

பாக்யராஜ் அணி குற்றம் சாட்டிய காரணம்:

வெற்றி பெற்றுள்ள இந்த அணியை சேர்ந்த பொது செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி, துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு முன்னதாக ஓட்டு எண்ணிக்கையில் நாசர் அணியை எதிர்ப்பு பாக்யராஜ் அணி எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். பதிவான ஓட்டுகள் விட எண்ணிக்கையின் போது கூடுதல் ஓட்டு உள்ளதாக பாக்யராஜ் அவர்கள் குற்றம்சாட்டினர். இதனால் ஓட்டு எண்ணிக்கை சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த தேர்தலில் 100 க்கும் அதிகமான ஓட்டுகள் கூடுதலாக உள்ளதாகவும், ஓட்டு எண்ணிக்கையில் தில்லுமுல்லு நடப்பதாக கூறி எதிரணியினரை குற்றம் சாட்டியுள்ளார் பாக்யராஜ்.

Advertisement