சிவாஜி குடும்பத்தில் பிறந்தும் உச்ச நடிகராக வரமுடியவில்லை – இந்த சிவாஜி பேரனை ஞாபகம் இருக்கா ?

0
537
dushyanth
- Advertisement -

தமிழ் சினிமா என்ற ஒன்று தொடங்கிய காலத்தில் தன் நடிப்பின் மூலம் மக்களை வியப்பிலும் ஆச்சர்யத்திலும் அடைய செய்தவர் சிவாஜி கணேசன். இன்றும் இவருடைய நடிப்புக்கு யாரும் நிகர் இல்லை என்றுதான் சொல்லணும். அந்தளவிற்கு தன்னுடைய நடிப்பின் மூலம் ஒட்டுமொத்த மக்களையும் கவர்ந்தவர் சிவாஜி கணேசன். இவருடைய மகன் பிரபு. இவர் தன் தந்தையைப் போல் இல்லை என்றாலும் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவரை தொடர்ந்து இவருடைய மகன் விக்ரம் பிரபு.

-விளம்பரம்-

தற்போது விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இப்படி சிவாஜி கணேசன் குடும்பத்தில் இருந்து ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒருவர் சினிமாவில் இருந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் பிரபுபின் மகனும் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். அதோடு சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் சில படங்களில் நடித்திருக்கிறார். மேலும் அவரது மக்களும் சில படங்களில் நடித்திருக்கிறார் ஆனால் அந்த அளவிற்கு பிரபலம் கிடைக்கவில்லை.

- Advertisement -

குற்ற உணர்வு ஏற்பட்டது :

இந்த நிலையில் தான் சிவாஜி கணேசன் பேரன் துஷ்யந்த் ராம்குமார் சமீபத்தில் செய்தி ஊடகம் ஒன்றிக்கு பேட்டி கொடுத்திருந்தார். அவர் கூறியதாவது தொடக்கத்தில் கல்லூரி படிப்பை முடித்த பிறகு நேரடியாக “சக்சஸ்” நடிக்க வந்துவிட்டேன் படத்தின் பாததியில் தான் தெரிந்தது நடப்பது எவ்வளவு கடினம் என்று. படமும் அந்த அளவிற்கு வெற்றியடையவில்லை, அதற்கு சில விமர்சனங்களும் இன்னார் குடுப்பதை சேர்ந்தவர் நடித்த படம் வெற்றியடையவில்லை என்று அப்போது வருத்தமாக இருந்தது. அதற்கு பிறகு மச்சி படம் வந்தது அப்படம் ஓரளவுக்கு வெற்றியை கொடுத்தாலும் சரியாக பண்ணவில்லையோ என்ற குற்ற உணர்வு இருந்தது. அந்த நேரத்தில் ஏண்டா இந்த உலகத்தில் வாழ்கிறோம் என்ற எண்ணம் தோன்றியது.

பாதை மாறியது :

அதற்கு பிறகு சிறிய இடைவெளி விட்டேன், அப்போதுதான் ரஜினிகாந்த என்னுடைய அப்பா ராம்குமாருடன் படம் பண்ணலாம் என்று அழைத்தார். சிவாஜி தயாரிப்பு நிறுவனம் அப்போது மிகப்பெரிய நிறுவனம், எனவே அந்த வாய்ப்பை தவறவிடக் கூடாது என்று தயாரிப்பில் வந்தேன் அது அப்படியே அஜித் அசல், சிரியல்கள் என்று சென்று விட்டது. பின்னர் ஒரு முறை கமலஹாசனுடன் சந்திக்கும் போது இந்த துறையில் மிகவும் கடினம் ஏனென்றால் உங்களுடைய தத்தா சிவாஜியும் சரி பிரபுவும் சரி மிகவும் கடினமாக உழைத்தார்கள். எனவே உங்களுக்கு 2 மடங்கு பொறுப்பு இருக்கிறது எனக் கூறினார். அதன் பிறகுதான் நடிப்பு கற்றுக்கொள்ளலாம் என்று சென்றான் அப்படியே பாதை மாறி சென்று விட்டது.

-விளம்பரம்-

சினிமா ரீஎன்ட்ரி :

அந்த பின்னர் இவ்வளவு வருடம் கழித்து என்னுடைய மனைவின் மூலம் தான் மறைந்த சுஜாதா கதையில் இருந்து மையமாக எடுத்த இங்கிலிஷ் தமிழ் நாடகம். அந்த நாடகம் நன்றாக சென்ற பிறகுதான் என்னுடைய நடிப்பு வழக்கை மீண்டும் தொடங்கியது. அதற்கு பிறகு அஸ்திரா என்கிற மலையாள படத்தில் நடித்தேன், பின்னர் தமிழில் தீர்க்க தரிசி என்ற படத்தின் படப்பிடிப்பு முடிந்து வரும் பிப்ரவரி மாதம் படம் வெளியாக இருக்கிறது.

பிரபுவிடம் இருந்து கற்றுக்கொண்டது :

சிவாஜி பேரன் என்பதினால் சில இடங்களில் என்னை மாட்டும் தனிமை படுத்துவது போன்ற்று இருந்தது. இவ்ளோ பெரிய வீட்டு பையன் எப்படி பழகுவது என்று நினைப்பார்கள். என்னுடைய தாத்தா ஒரு மகான், ஆனால் நான் ஒரு சாதரண மனிதன் எனவே பலரிடம் உங்களுடன் பணியாற்றி சக நடிகர் போல பழகுங்கள் என்று பல முறை சொல்லியிருக்கிறேன். இந்த விஷயம் என்னுடைய சித்தப்பா பிரபுவிடம் இருந்து கற்றுக்கொண்டேன். என பல சுவாரசியமான விசியங்களை பகிர்ந்து கொண்டார் சிவாஜியின் பேரம் துஷ்யந்த் ராம்குமார்.

Advertisement