நாடோடிகள்-2 இரண்டாவது டீசர்.! வீடியோ இதோ

0
1747
Nadodigal
- Advertisement -

தமிழில் 2009 ஆம் ஆண்டு இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான “நாடோடிகள்” படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் முதல் பாகம் பெற்ற வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் “நாடோடிகள் 2” என்ற பெயரில் தயாராகியுள்ளது.

-விளம்பரம்-

- Advertisement -

இந்த படத்தில் சசி குமார், அஞ்சலி,பரணி, அதுல்யா ரவி போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் ,இந்த படத்தில், துணை கதாபாத்திரத்தில் எம் எஸ் பாஸ்கர் , ரஞ்சினி, சூப்பர் சுப்ராயன் போன்றவர்களும் நடித்துளள்னர். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் 9 ஆண்டுகள் கழித்து கைகோர்க்கும் சசி குமார் மற்றும் சமுத்திரக்கனி கூட்டணியில் தயாராகி வரும் ‘நாடோடிகள் 2’ படத்தின் முதல் டீசரை சில நாட்களுக்கு முன்னர் நடிகர் சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாவது டீசர் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement