நாடோடிகள் பட நடிகை அனன்யாவை ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி இருகாங்க பாருங்க.

0
648
- Advertisement -

நாடோடிகள் பட நடிகை அனன்யாவின் லேட்டஸ்ட் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியாகியிருந்த படம் நாடோடிகள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை அனன்யா. இந்த படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆகியிருந்தார்.

-விளம்பரம்-

முதல் படத்தில் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அனன்யா 1987ஆம் ஆண்டு கொச்சின் கேரளாவில் பிறந்தவர். இவருடைய உண்மையான பெயர் அயில்யா கோபாலகிருஷ்ணன் நாயர். இவருடைய அப்பா ஒரு திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். அனன்யா கொச்சினில் திரைப்பட செயின்ட் சேவியர் கல்லூரியில் பி.ஏ டிகிரி முடித்துள்ளார்.

- Advertisement -

அனன்யா குறித்த தகவல்:

இன்னொரு ஆச்சரியமான செய்தி என்னவென்றால் அனன்யா ஒரு வில்வித்தை சாம்பியன் ஆவார். இவர் பள்ளிகாலம் முதலே வில்வித்தை பயின்று வருகிறார். மேலும், தனது 20 வயதில் கல்லூரியில் வில்வித்தை செய்த போது ஒரு இயக்குனர் கண்ணில் பட, அவர்மூலம் அனன்யாவிற்கு பல பட வாய்ப்புகள் அப்போதே வந்தது. இதனால் தான் இவர் சினிமாவிற்கு வந்தார். இதற்கு முன்னர் 1995ஆம் ஆண்டு அனன்யா 8 வயதில் தன் அப்பாவின் தயாரிப்பில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

-விளம்பரம்-

அனன்யா திரைப்பயணம்:

பின்னர் 2009ஆம் ஆண்டு நாடோடிகள் படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். இந்த படத்தில் தான் அயில்யா என்ற பெயர் அனன்யா என மாற்றப்பட்டது. இதனை அடுத்து இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த சீடன், சர்வானந்த்-ஜெய்- அஞ்சலி ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருந்த எங்கேயும் காதல், புலிவால் , அதிதி போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதற்குப்பின் இவருக்கு தமிழில் சரியாக வாய்ப்புகள் அமையவில்லை.

அனன்யா நடிக்கும் படங்கள்:

பின் மலையாள மொழியில் கவனம் செலுத்தி வந்தார். பாசிட்டிவ் என்ற படத்தின் மூலம் தான் இவர் மலையாள மொழியில் அறிமுகம் ஆகியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் மலையாள மொழி படங்களில் தான் பிஸியாக நடித்து வருகிறார். கடைசியாக இவர் தமிழில் நடித்திருந்த படம் காட்பாதர். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. தற்போது இவர் மலையாள படங்களிலும், டிவி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார்.

அனன்யா லேட்டஸ்ட் புகைப்படம்:

மேலும், இவர் சோசியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக இருக்கிறார். இந்த நிலையில் நடிகை அனன்யாவின் லேட்டஸ்ட் புகைப்படம் தான் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் அவர் பார்ப்பதற்கு அடையாளமே தெரியாமல் கொஞ்சம் குண்டாக ஆளே கொழுக்கு முழுக்கு என்று இருக்கிறார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, நாடோடிகள் பட நடிகையா இவர்! என்று ஆச்சரியத்தில் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Advertisement