நாக சைதன்யா- சோபிதா திருமணம் எப்போ தெரியுமா?- உற்சாகத்தில் நாகர்ஜுனா குடும்பம்

0
259
- Advertisement -

நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் திருமண தேதி குறித்த தகவல் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் நாக சைதன்யா- சோபிதா திருமணம் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா மகன் ஆவார்.

-விளம்பரம்-

இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. பின், நாக சைதன்யா- நடிகை சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இருவரும் தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடிகளாக பலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சமந்தா-நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள்.

- Advertisement -

நாக சைதன்யா- சோபிதா துலிபாலா:

இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதுவரை இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை? ஏன் பிரிந்தார்கள்? என்று எந்த விவரமும் தெரியவில்லை. இவர்களின் விவாகரத்திற்கு பிறகு நடிகர் நாக சைதன்யா அவர்கள் நடிகை சோபிதாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக சோசியல் மீடியாவில் செய்திகள் உலாவி வந்தது. அதோடு இவர்கள் இருவரும் வெளிநாடுகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி இருந்தது.

நாக சைதன்யா- சோபிதா நிச்சயதார்த்தம்:

அதைத்தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி, நாக சைதன்யா-சோபிதா நிச்சயதார்த்தம் நாக சைதன்யாவின் வீட்டில் எளிமையாக நடந்தது. இது தொடர்பாக நாகர்ஜுனா பதிவு ஒன்று போட்டிருந்தார். பின் சோசியல் மீடியா முழுவதும் இவர்களுடைய நிச்சயதார்த்த புகைப்படங்கள் தான் வைரலாகி இருந்தது. ஆனால், சமந்தா ரசிகர்கள் சைதன்யாவை விமர்சித்து இருந்தார்கள். பின், திருமணத்திற்கான வேலைகள் நடைபெறுவதாக கூறப்பட்டது.

-விளம்பரம்-

தீபாவளி கொண்டாட்டம்:

நிச்சயதார்த்தம் முடிந்ததை அடுத்து இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்து கொள்ள ஆரம்பத்தில் இருக்கிறார்கள். அதன்படி சமீபத்தில் நடந்த என்டிஆர் விருது வழங்கும் விழாவில் இருவரும் கலந்து கொண்டார்கள். அதேபோல் தீபாவளியையும் இருவரும் இணைந்து கொண்டாடினார்கள். இந்நிலையில் தற்போது இவர்களது திருமணம் குறித்த தகவல்தான் வெளியாகி இருக்கிறது. முதலில் இவர்களது திருமணம் ராஜஸ்தானில் நடக்க இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி இருந்தது.

திருமணம் எப்போது:

தற்போது ஹைதராபாத்தில் உள்ள நாகார்ஜுனாவுக்கு சொந்தமான ஸ்டுடியோவில் திருமணம் நடக்கும் என கூறப்படுகிறது. மேலும், வருகின்ற டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி திருமணம் நடக்கும் என்றும், அதில் திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. அதோட தனது மகனின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என்று திட்டமிட்டிருக்கும் நாகார்ஜுனா அதற்கான ஏற்பாடுகளை இப்போது இருந்தே உற்சாகத்தோடு ஆரம்பித்திருக்கிறாராம்.

Advertisement