தான் இருந்த தியேட்டரில் அந்த படத்தின் ட்ரெய்லர் வெளியானதால் தியேட்டரை விட்டு வெளியேறிய நாக சைதன்யா.

0
1385
- Advertisement -

சமந்தாவின் ‘குஷி’ ட்ரெய்லர் வெளியானதால் தியேட்டரை விட்டு நாக சைதன்யா வெளியேறினார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது சமந்தா விஜய் தேவர்கொண்டாவின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் குஷி. இந்த படத்தை இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கி இருக்கிறார். இந்த படத்தில், முரளி சர்மா, சச்சின் கதேர், சரண்யா பொன்வண்ணன், லட்சுமி என பல பிரபலங்கள் நடித்துள்ளனர் . இப்படம் செப்டம்பர் 1 ஆம் தேதி தெலுங்கு, தமிழ், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

-விளம்பரம்-

சமந்தா நாக சைதன்யா பிரிவு

தென்னிந்திய சினிமா உலகில் மிக சிறந்த ஜோடிகளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும், இவர்கள் இருவரும் சேர்ந்து மூன்று படங்களில் நடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

சமந்தா பிரிவு குறித்து சொன்னது:

சமூக வலைத்தளத்தில் வந்த வதந்தி காரணமாகத் தான் எங்கள் இருவர் இடையே பிரச்சனை ஆரம்பமானது. அது மெல்ல மெல்ல பெரிதாக கடைசியில் அது போக வேண்டிய நிலைமைக்கு வந்தது. முதலில் நான் வதந்தி குறித்து அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை. ஆனால், அதன் பிறகு நிலைமைகள் மாறிவிட்டது. எங்களின் கடந்த காலத்தில் கொஞ்சமும் சம்மந்தம் இல்லாத மூணாவது நபரை இதற்குள் இழுத்து அவமரியாதை செய்தனர். என்ன நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக் கொள்கிறேன். இப்போது நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

தியேட்டரில் நடைபெற்றது

தற்போது அவர் ‘பாயிஸ் ஹாஸ்டல்’ என்ற கன்னடா படத்தை பார்க்க சென்றுள்ளார். அங்கு யாரும் எதிர்பாரத விதமாக சமந்தா தற்போது நடித்து விரைவில்  வெளிவர விருக்கும் ‘குஷி’ படத்தின் ட்ரைலரை ஒளிபரப்ப பட்டது. அந்த திரைபடத்தில் சமந்தா விஜய் தேவர்கொண்டாவுடன் இணைத்து நடித்து வந்தார்.

-விளம்பரம்-

அந்த ட்ரைலரை கண்டவுடன் அவர் தியேட்டரில் இருந்து வெளியே கிளம்பி விட்டார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தை இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கி இருக்கிறார். இந்த படத்தில், முரளி சர்மா, சச்சின் கதேர், சரண்யா பொன்வண்ணன், லட்சுமி என பல பிரபலங்கள் நடித்துள்ளனர் . இப்படம் செப்டம்பர் 1 ஆம் தேதி தெலுங்கு, தமிழ், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.     

Advertisement