எனக்கு என்ன வயசாகிட்டு போதுனு அப்படி கூப்புட்றாயா – கிரிட்டி ஷெட்டியிடம் கேள்வி கேட்ட நாக சைதன்யா. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.

0
383
naga
- Advertisement -

தெலுங்கு சினிமாவில் பல காலங்களாக பிரபலமாக இருந்து வரும் சிரஞ்சீவியின் மருமகனான பஞ்ச வைணவ தேஜ் நடிப்பில் இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில் வெளியான “உப்பேனா” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் நடிகை கீர்த்தி ஷெட்டி. இப்படத்தில் விஜய் சேதுபதியின் மகள் கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். தன்னுடைய 17 வயதிலேயே கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார் 2021ஆம் ஆண்டு வெளியான இப்படமானது வணீக ரீதியாக பெரிய வரவேப்பை பெற்று மிகப்பெரிய ஹிட் அடுத்து வசூல் சாதனை படைத்தது.

-விளம்பரம்-

இப்படத்திற்கு பிறகு நடிகை கீர்த்தி ஷெட்டி “ஷ்யாம் சிங்க ராய், பங்கராஜா, தி வாரியர்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ள இவர் நடித்திருந்த “தி வாரியர்ஸ்” படத்தில் நடிகர் ராம் பொதினேனிக்கு ஜோடியாக நடித்த“புல்லட்டுப் பாடல்” தென் இந்திய சினிமாவில் வைரலானது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் அஜயந்தே ரண்டம் மோஷனம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் தற்போது சூர்யா நடித்து வரும் சூர்யா 41 எந்த தற்காலிக தலைப்பு வைத்துள்ள படத்த்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் 19வயது மட்டுமே ஆகும் கீர்த்தி ஷெட்டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 3.2 மில்லியன் பின்தொடர்பவர்களை வைத்திருக்கிறார். மேலும் அந்த பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் கீர்த்தி ஷெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பிரபல நடிகரான நாக சைதன்யா பற்றி போட்டிருக்கும் ஒரு ட்விட் பதிவானது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அவர் அந்த பதிவில் நவம்பர் 23 ஆம் தேதி, நடிகர் நாக சைதன்யா நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வரவிருக்கும் படமான “கஸ்டடி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பகிர்ந்துகொண்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். மேலும் அந்த் பதிவில் உலகில் நீங்கள் காண விரும்பும் மாற்றமாக நீங்கள் இருக்க வேண்டும்! மற்றும் கருவே சரியான உதாரணம்.

-விளம்பரம்-

நான் சந்தித்த மிகவும் எளிமையான, இனிமையான மற்றும் ஊக்கமளிக்கும் நபர்களில் ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். கஸ்டடியின் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் முற்றிலும் உக்கிரமாகத் தெரிகிறது என்று அந்த பதிவில் கூறியிருந்தார். இதற்க்கு பதிலளித்த நடிகர் நாக சைதன்யா போட்டிருந்த பதிவில் மிக்க நன்றி கீர்த்தி ஷெட்டி !! ஆனால் காரு என்று ஏன் சேர்க்கிறீர்கள் ?? எனக்கு என்ன வயதாகிகொண்டிருப்பதாலா ?? என்று பதிவிட்டிருந்தார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் பலர் நாக சைதன்யாவை ஏற்கனவே நடிகை சமந்தாவுக்கும் இவருக்கும் இடையிலான பிரிவு நெட்டிசன்களினால் விமர்ச்சிக்கப்பட்ட நிலையில் இவர் இப்படி போட்டிருந்த பதிவானது நெட்டிசன்கள் மத்தியில் கேலிக்கைக்கு உள்ளானது. மேலும் அந்த பதில் சிலர் உங்களுக்கு 36வயது அவர்களுக்கு 19வயது இருக்கும் போது நீங்கள் பூமர் அங்கிள் தான் என்று கலாய்த்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் அவர் போட்டிருந்த அந்த ட்விட்டர் பதிவானது தற்போது ஷோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement