தெலுங்கு நடிகர் நாக சவுர்யாவிற்கும் – அனுஷா ஷெட்டி திருமணம் – வீடியோ இதோ

0
533
anushka
- Advertisement -

தெலுங்கு நடிகர் நாக சவுர்யாவிற்கு திருமணம் நடந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தெலுங்கு திரை உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நாக சவுர்யா. இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளிவந்த Cricket Girls And Beer எனும் படத்தின் மூலம் தான் ஹீரோவாக சினிமாவில் அறிமுகம் ஆகியிருந்தார்.

-விளம்பரம்-

அது மட்டும் இல்லாமல் இயக்குனர் விஜய் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கிய தியா படத்தில் நாக சவுர்யா கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இதுவரை இவர் 25 படங்களுக்கு வரை நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

நாக சவுர்யா திரைப்பயணம்:

தற்போது இவர் மூன்று படங்களில் கமிட் ஆகி பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் நாக நாக சவுர்யாவிற்கு திருமணமாகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, நடிகர் நாக சவுர்யா அவர்கள் அனுஷா செட்டி என்பவரை இன்று திருமணம் செய்து இருக்கிறார். அனுஷா செட்டி பெங்களூரை சேர்ந்தவர்.இவர் பெங்களூரில் இன்டீரியர் டெக்கரேஷன் துறையில் பணிபுரிந்து வருகிறார்.

நாக சவுர்யா- அனுஷா செட்டி திருமணம்:

இவர்களுடைய திருமணம் பெங்களூரில் தான் நடைபெற்றிருக்கிறது. நவம்பர் 19ஆம் தேதி இவர்களுடைய திருமண நிகழ்வுகள் துவங்கி இருக்கிறது. இன்று கோலாகலமாக திருமணம் நடைபெற்று இருக்கிறது. மேலும், இவர்களுடைய திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகியிருக்கிறது. இதை பார்த்து ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலருமே நாக சவுர்யா- அனுஷா செட்டி இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement