சமந்தாவுடன் விவாகரத்து – மகனை நினைத்து பெருமைப்படும் நாகர்ஜூனா ஓபன் டால்க்.

0
459
nagarjuna
- Advertisement -

தெலுங்கு சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகர் நாகார்ஜுனா. இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளரும் ஆவார். இவர் தெலுங்கு மொழியில் மட்டுமில்லாமல் தமிழ், பாலிவுட் என பல மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். அதோடு இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. மேலும், நாகர்ஜுனா அவர்கள் லக்ஷ்மி ராமா நாயுடு என்பவரை 1984 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருடைய மகன் தான் நாக சைதன்யா.

-விளம்பரம்-

தற்போது தெலுங்கு சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக நாக சைதன்யா திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் தமிழிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கும் சமந்தாவை நீண்ட காலமாக காதலித்து வந்தார். பின் இருவரும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். தென்னிந்திய சினிமா உலகில் சிறந்த ஜோடிகளாக இருவரும் திகழ்வார்கள் என்று அனைவரும் எதிர் பார்த்தார்கள்.

- Advertisement -

நாகசைதன்யா- சமந்தா விவாகரத்து:

ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிய இருப்பதாக சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தார்கள். இது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அதுமட்டும் இல்லாமல் கடந்த ஆண்டு முழுவதும் இவர்களுடைய விவாகரத்து குறித்த சர்ச்சை தான் சோசியல் மீடியாவில் அதிகம் இருந்தது. இன்னும் கூட இவர்களுடைய விவாகரத்து குறித்து பல வதந்திகளும் சர்ச்சைகளும் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

நாகசைதன்யா- நாகர்ஜுனா நடிக்கும் படம்:

இருந்தும் பிரிவிற்கு பிறகு இருவரும் தங்களுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். ஆனால், சமந்தா தான் தன் விவாகரத்து குறித்து தொடர்ந்து பல இடங்களில் பேசி வந்தார். ஆனால், நாக சைதன்யாவோ விவாகரத்து முடிவில் சமந்தா சந்தோசம் என்றால் எனக்கும் சந்தோசம் தான் என்று பெருந்தன்மையாக பேசி இருந்தார். இப்படி ஒரு நிலையில் நாகசைதன்யா- நாகர்ஜுனா இருவரும் சேர்ந்து தற்போது நடித்திருக்கும் படம் பங்கர் ராஜு. தந்தையும் மகனும் சேர்ந்து இதற்கு முன் பல படங்களில் நடித்து இருக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் இருவரும் சேர்ந்து இருக்கிறார்கள். கடைசியாக நாகசைதன்யா நடிப்பில் வெளிவந்த லவ் ஸ்டோரி படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருந்தது.

-விளம்பரம்-

பங்கர் ராஜு படம்:

அதனை தொடர்ந்து தற்போது இவர் பங்கர் ராஜு படத்தில் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் நாகார்ஜூனாவுக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணனும், நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை நாகர்ஜுனா ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தை கல்யாண் கிருஷ்ணா இயக்குகிறார். இந்நிலையில் இந்த படத்தின் நிகழ்ச்சியில் நாகர்ஜுனா தன் மகன் விவாகரத்து குறித்து பேசிய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பங்கர் ராஜு படத்தின் விழாவில் நாகர்ஜுனா கூறியது:

சமீபத்தில் பங்கர் ராஜு படத்தின் விழா ஒன்று நடந்தது. அதில் நாகர்ஜுனா தன் மகன் குறித்து கூறியிருப்பது, விவாகரத்து விஷயத்தில் நாக சைதன்யா அமைதியாக இருந்திருந்தை நினைத்து எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. அவர் ஒரு வார்த்தை கூட எதுவும் பேசாமல் கவனமாக இருந்தார். எல்லாத்தையும் போலவே நானும் அவரைப் பற்றி மிகவும் கவலைப்பட்டேன். ஆனால், நான் அவரைப் பற்றி கவலைப்படுவதை விட அவர் என்னை பற்றி அதிகம் கவலைப்பட்டு இருந்தார் என்று கூறியிருந்தார். விவாகரத்துக்கு பின் சமந்தா தான் அதை பற்றி அதிகம் பேசி வருகிறார். தற்போது நாகர்ஜுனாவின் இந்த பேச்சு சமந்தாவை சூசகமாக சாடுவது போல் இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Advertisement