அதன் பிறகே இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது, சமந்தா தான் முதலில் விவாகரத்து கேட்டார் – நாகர்ஜுனா கொடுத்த ஷாக்.

0
486
nagarjuna
- Advertisement -

விவாகரத்துக்கு காரணமே சமந்தா தான் என்று பிரபல நடிகர் நாக அர்ஜுனா அளித்த பரபரப்பு பேட்டி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் சமந்தா. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழிகளில் உள்ள பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் நடிகை சமந்தா அவர்கள் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து இருந்தார்.

-விளம்பரம்-
samantha

திருமணத்திற்கு பிறகும் சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார். பின் இருவரும் சிறந்த ஜோடிகளாக வலம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா- நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். கடந்த ஆண்டு முழுவதும் இது குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது. இதனால் சமந்தா அதிகமான மன அழுத்தத்திற்கு ஆளாகி இருந்தார்.

- Advertisement -

சமந்தா விவாகரத்து விவகாரம்:

பின் இவர் தன்னுடைய தோழியுடன் சேர்ந்து ஆன்மீக சுற்றுலா சென்று இருந்தார். இப்படி இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்ததற்கு பிறகும் படங்களில் அதிக கவனத்தைச் செலுத்தி வருகிறார்கள். அதிலும் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த புஸ்பா படத்தில் சமந்தா ஆடிய இருந்த ‘ஊ சொல்றியா மாமா’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் படு பேமஸ் ஆனது. இதனை தொடர்ந்து மீண்டும் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆட சமந்தா ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

nagarjuna

சமந்தா-நாக சைதன்யா இணையும் போகும் சர்ச்சை:

இப்படி தற்போது நடிகை சமந்தா அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி பிசியாக நடித்து வருகிறார். இருந்தாலும் இவர்களுடைய விவாகரத்து குறித்த சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகை சமந்தா தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாக சைதன்யாவை பிரிவதாக போட்ட பதிவை நீக்கி இருக்கிறார். இதனால் இருவரும் மீண்டும் இணைய உள்ளதாக சமூக வலைத்தள பக்கங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

-விளம்பரம்-

நாகர்ஜுனா அளித்த பேட்டி:

இப்படி இருக்கும் நிலையில் சமந்தா தான் விவாகரத்து வேண்டும் என்று கேட்டதாக நாகசைதன்யா அப்பா நாகர்ஜுனா தெரிவித்துள்ள தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. நாகசைதன்யா – சமந்தா பிரிவு குறித்து நாகர்ஜுனா பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர் கூறி இருப்பது, சமந்தா – நாக சைதன்யா இருவருமே நெருக்கமாக தான் இருந்தார்கள். அவர்களுக்குள் எப்படி பிரச்சினை வந்தது என்று எனக்கு தெரியவில்லை.

நாக சைதன்யா- சமந்தா விவாகரத்துக்கு காரணம்:

கடந்த ஆண்டு புத்தாண்டு தினத்தை கூட இருவரும் ஒன்றாக கொண்டாடினார்கள். அதன் பிறகே இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் முதன் முதலில் சமந்தா தான் விவாகரத்து வேண்டும் என்று கேட்டிருக்கிறார் என்று நாகர்ஜுனா தெரிவித்துள்ளார். இவரின் இந்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சமந்தா என்ன கூற போகிறார்? என்றும் உண்மையாலுமே இவர்கள் இருவரும் இணைய இருக்கிறார்களா? என்பதையும் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement