பத்திரிகையாளர் முன் மருமகள் சமந்தாவை கிண்டல் செய்த மாமனார்..!

0
313

நடிகை சமந்தா, தென்னிந்திய சினிமாவில் பல இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்து வருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணத்திற்கு பிறகும் எந்த வித தடையுமின்றி சினிமாவில் நடித்து வருகிறார்.

samantha-chaitu

திருமணத்திற்கு பின்னரும் தனது மார்கெட்டை பிஸியாக வைத்து வரும் அம்மணி தற்போது சிவகார்த்திகேயனுடன் ‘சீமாராஜா ‘ படத்தில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அதே போல இவரது நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் ”யூ டர்ன்” என்ற படமும் கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி வெளியானது.

அதே நாளில் சமந்தாவின் கணவர் நாக சைதன்யா நடித்துள்ள ‘‘சைலஜா அல்லுடு ரெட்டி’’ என்ற படமும் வெளியானது. இந்நிலையில் சமீபத்தில் ”யூ டர்ன்” படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற தெலுங்கு நடிகரும் சமந்தாவின் மாமனாருமாகிய நடிகர் நாகர்ஜூன பங்குபெற்றிருந்தார்.

Samantha

அப்போது பேசிய அவர் “இந்தப் படத்தின் கதையை சமந்தா என்னிடம் சொல்லும்போது ரொம்ப திரில்லிங்காக இருந்தது. ஒரே குடும்பத்தினரின் மூன்று படங்கள் வெளியாகின்றன.மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சமந்தா ஏதேனும் கின்னஸ் சாதனைக்கு முயற்சி செய்கிறாரா என்று தெரியவில்லை என்று கிண்டலாக பேசியுள்ளார்.