நீண்ட நாள் காதலரை மணமுடித்த நாகினி சீரியல் நடிகை – திருமண புகைப்படங்கள் இதோ.

0
466
Mouni
- Advertisement -

பொதுவாகவே மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்கி வருகிறது. அதிலும் கொரோனா தொடங்கிய காலத்திலிருந்து வெள்ளித்திரையை விட சின்னத்திரை சீரியல்கள் தான் மக்கள் அதிகம் விரும்பி பார்த்து வருகிறார்கள். இல்லத்தரசிகள் மட்டுமில்லாமல் சிறுவர்கள் முதல் பெரியோர் வரை என அனைவரும் விரும்பிப் பார்த்து வருகிறார்கள். இதனால் ஒவ்வொரு சேனலும் புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. அதுமட்டுமில்லாமல் தங்களுடைய மொழி சீரியல்களை மட்டுமில்லாமல் பிறமொழி சீரியல்களை டப்பிங் செய்தும், ரீமேக் செய்தும் ஒளிபரப்பி வருகிறார்கள்.

-விளம்பரம்-

இது இப்போது மட்டுமில்ல சீரியல் என்ற ஒன்று தொடங்கிய காலத்திலிருந்தே டப்பிங் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஹிந்தி சீரியல் எல்லாம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று இருக்கிறது. அதில் தமிழ் சின்னத்திரையில் அதிக வரவேற்ப்பை பெற்ற தொடர் தான் நாகினி. இது இந்தியிலிருந்து தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வருகிறது. மேலும், இது முழுக்க முழுக்க இச்சாதாரி நாகங்கள் கதையை மையமாகக் கொண்டது. தற்போது ஐந்து சீசன்களை கடந்திருக்கிறது.

- Advertisement -

நாகினி சீரியல்:

இந்த தொடர் பழிவாங்குதல், தீயோரிடமிருந்து நாகமணியை பாதுகாத்தல் ஆகிய இரண்டை மையமாகக் கொண்டு வருகிறது. இந்த நாகினியின் முதல் பருவம் 2015 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பானது. இந்த பருவம் மிகப்பெரிய வெற்றியை கண்டது. இதில் மௌனி ராய், அதா கான், அர்ஜுன் பிஜ்லானி, சுதா சந்திரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பின் இரண்டாவது பருவம் 2016 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டது. இதில் மௌனி ராய், அதா கான், சுதா சந்திரன், கரண்வீர் போரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

நாகினி சீசன்கள்:

மூன்றாவது பருவம் 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டது. இதில் சுர்பி ஜியோதி, அனிதா ஹசனந்தனி, பியர்ல் வி பூரி, மௌனி ராய், அதா கான், சுதா சந்திரன், கரண்வீர் போரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். நான்காவது பருவம் ‘நாகினி: விதியின் விஷ விளையாட்டு’ என்ற புதிய தலைப்புடன் ஒளிபரப்பப்பட்டது. இது 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டது. இதில் நியா ஷர்மா, விஜயேந்திர குமேரியா, ஜாஸ்மின் பசின், அனிதா ஹசனந்தனி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பின் ஐந்தாவது பருவம் 2020 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டது. இதில் சுர்பி சந்த்னா, ஷரத் மல்ஹோத்ரா, மோஹித் சேகல் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

-விளம்பரம்-

நாகினி சீரியல் மௌனி ராய்:

இப்படி நாகினி தொடர் ஐந்து சீசன்களை கடந்துள்ளது. விரைவில் 6வது சீசனும் வரை இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். அதற்கான புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. இப்படி பல சீசன்கள் கடந்தாலும் அனைவருக்கும் பரிச்சயமான நாகினியாக இருப்பவர் மௌனி ராய். நாகினி என்ற பாம்பு சீரியல் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் மௌனி ராய். அதிலும் தமிழ் இளைஞர்கள் மத்தியில் படு பேமஸ் ஆனார். இவரது அழகால் இளைஞர்களையும் சீரியல் பார்க்க வைத்தவர் மௌனி ராய். மேலும், நாகினி சீரியல் மூலம் மௌனி ராய் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார்.

மௌனி ராய் நடித்த படங்கள்:

சீரியலுக்கு பிறகு இவர் பாலிவுட் சினிமாவில் அதிக கவனம் செலுத்த தொடங்கினார். இவர் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த கோல்ட் படத்தின் மூலமாக கதாநாயகியாக தன் திரையுலக பயணத்தை தொடங்கினார். அதற்கு பிறகு கேஜிஎப் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருப்பார். அதற்கு பிறகு ரோமியோ அக்பர் வால்டர், மேட் இன் சைனா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அடுத்து மௌனி ராய் ப்ரம்மாஸ்த்ரா மற்றும் முகுல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மௌனி ராய்க்கு திருமணம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மௌனி ராய் கோலாகலமாக மலையாள முறைப்படி திருமணம் செய்துள்ளார்.

மௌனி ராய்- சுராஜ் நம்பியார் திருமணம்:

மௌனி ராய், சுராஜ் நம்பியார் என்பவரை நீண்ட காலமாக காதலித்து வந்தார். இவர் துபாய் தொழில் அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது இவர்கள். அதோடு இருவரும் முதன் முதலில் 2019ஆம் ஆண்டு நியூ இயர் அன்று தான் சந்தித்திருக்கிறார்கள். அப்போது இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. அன்று தொடங்கிய இவர்களுடைய காதல் இன்று திருமணத்தில் முடிந்துள்ளது. மேலும், இவர்களுடைய திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அதில் மௌனி ராய் கேரளத்து பைங்கிளியாக காட்சி அளித்திருக்கிறார். அவருடைய புகைப்படத்திற்கு பலரும் லைக் செய்தும் ஷேர் செய்தும் திருமண வாழ்த்துக்களை பதிவிட்டும் வருகிறார்கள்.

Advertisement