2003ல் சோனியா காந்தி என்னிடம் இப்படி சொன்னார், ஆனால் – காங்கிரஸ் கட்சியில் இருக்கும் நக்மா வருத்தம்.

0
374
Nagma
- Advertisement -

தமிழ் சினிமாவில் 90 ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டு இருந்தவர் நடிகை நக்மா. இவருடைய உண்மையான பெயர் நந்திதா மொராஜி. இவர் ஆரம்பத்தில் தன்னுடைய நடிப்பு பயணத்தை பாலிவுட்டில் தான் தொடங்கியிருந்தார். பின் இவர் சில படங்கள் ஹிந்தியில் நடித்துவிட்டு தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். 2012 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்த காவலன் படத்தின் மூலம் தான் நக்மா தமிழ் சினிமா உலகிற்கு அறிமுமாகி இருந்தார். அதன் பின்னர் கார்த்திக், பிரபுதேவா, ரஜினி, நெப்போலியன் என்று பல்வேறு முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், தென்னிந்திய படங்களில் நல்ல வரவேற்பு கிடைத்தவுடன் நக்மா இங்கேயே அதிக கவனம் செலுத்த தொடங்கி இருந்தார். அதன் பின் நக்மாவின் மார்க்கெட் எகிறியது. மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், வங்காளி, போஜ்புரி, பஞ்சாபி, மராத்தி போன்ற பல மொழித் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். பின் இடைப்பட்ட காலத்தில் கதாநாயகியாக வாய்ப்பை இழந்த நக்மா நீண்ட இடைவெளிக்கு பின் அஜித் நடிப்பில் வெளிவந்த ‘தீனா’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் படத்தில் இருந்தார்.

இதையும் பாருங்க : நயன் – விக்கி பல முறை சென்று தரிசனம் செய்தும், திருப்பதியில் திருமணம் நடத்த மறுத்துள்ள கோவில் நிர்வாகம். வெளியான காரணம்.

- Advertisement -

நக்மா திரைப்பயணம்:

அதுமட்டும் இல்லாமல் 2001 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த சிட்டிசன் படத்தில் ஒரு சிபிஐ அதிகாரியாக நடித்திருந்தார். அதன் பின்னர் நக்மா போஜ்புரி படங்களில் கவனம் செலுத்தி இருந்தார். மேலும், சிட்டிசன் படத்திற்கு பின்னர் இதுவரை எந்த ஒரு தமிழ் படத்திலும் நக்மாவை காண முடியவில்லை. அதுமட்டும் இல்லாமல் சினிமா பட வாய்ப்புகள் இல்லாததால் நக்மா அரசியலில் குதித்து விட்டார். தற்போது இவர் காங்கிரஸில் கட்சி பதவியில் இருக்கிறார்.

மாநிலங்களவை தேர்தல்:

இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தன்னுடைய பெயர் இடம் பெறாதது குறித்து நக்மா பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் தற்போது 57 உறுப்பினர்களுக்கான இடங்கள் காலியாக இருக்கிறது. அதற்காக வருகிற ஜூன் 10-ம் தேதி அந்தந்த மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஆனது நாளையோடு முடிவடைகிறது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு கட்சிகளும் தங்களின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-

நக்மா போட்ட டீவ்ட்:

அந்த வரிசையில் காங்கிரசும் தங்கள் கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டு இருந்தது. அதில், தனது பெயர் இடம் பெறாதது குறித்து அதிருப்தி அடைந்த நக்மா ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, 2003-04ல் இருந்து நான் காங்கிரஸில் இணைந்த போது நாங்கள் ஆட்சியில் இல்லை. அப்போது தலைவர் சோனியா காந்தி என்னை ராஜ்யசபாவில் தேர்ந்தெடுப்பதாக தனிப்பட்ட முறையில் என்னிடம் உறுதியளித்திருந்தார். அதற்கு பிறகு இப்போது பதினெட்டு வருடங்கள் ஆகி விட்ட போதும் கூட இன்னும் ஒரு வாய்ப்பை கூட அவர் தரவில்லை.

டீவ்ட்டில் நக்மா சொன்னது:

ஆனால், மஹாராஷ்டிரா மாநிலங்களவையில் இம்ரானுக்கு இடமளிக்கப்படுகிறது. நான் கேட்கிறேன், நான் என்ன குறைவான தகுதியுடையவளா? என்று நக்மா கேள்வி எழுப்பியிருந்தார். இந்த பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. அதோடு மகாராஷ்டிராவில் காங்கிரஸில் இருந்து ஒரு ராஜ்யசபா எம்பி ஷீட் இருக்கும் நிலையில் மகாராஷ்டிராவை சேர்ந்த தனது வாய்ப்பளிக்காமல் ராஜஸ்தானை சேர்ந்த இம்ரானுக்கு வாய்ப்பளித்ததால் தான் நக்மா இந்த ட்விட் செய்து இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

Advertisement