தமிழ் சினிமாவில் பல்வேறு சகோதர சகோதரி நட்சத்திரங்கள் சினிமாவில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் சூர்யா – கார்த்தி, ஜீவா – ரமேஷ், அருண் விஜய் – வனிதா, சிம்ரன் – மோனால், நக்மா – ஜோதிகா இப்படி கூறிக்கொண்டே போகலாம், அந்த வகையில் தமிழ் சினிமாவில் தேவையணி மற்றும் நகுலும் ஒரு முக்கிய நட்சத்திர நடிகர்களாக திகழ்ந்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் சினிமாவில் 90-ஸ்களில் வெளிவந்த படங்களில் விஜய், அஜித், என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றவர் நடிகை தேவயானி.
இவருக்கு இரண்டு தம்பிகள் உள்ளனர். அதில் நகுலும் நடிகர் என்பது பலரும் அறிந்த ஒன்று.தொடக்கத்தில் நடித்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் இப்போது வெற்றிக் கொடுக்க போராடிக் கொண்டிருக்கிறார். இறுதியாக செய் என்ற படத்தில் நடித்திருந்தார் நகுல். ஆனால், அந்த திரைப்படம் எதிர்பார்த்தபடி வரவேற்பை பெறவில்லை. தற்போது நடிகர் நகுல், எரியும் கண்ணாடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சுனைனா நடித்து வருகிறார்.
நடிகர் நகுல் நடிகராக மட்டுமல்லாமல் ஒரு பாடகரும் கூட. இதுவரை தமிழில் 9 பாடல்களை பாடியுள்ளார். அந்நியன் படத்தில் வந்த காதல் யானை பாடல் மூலம் நடிகர் நகுல் பாடகராக அறிமுகமானார். மேலும், நடிகர் நகுல் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் வாசி ஒருவர், உங்களை எனக்கு பிடிக்காது ஏன்னா சூப்பர் சிங்கர்ல ஓவர் ஆக்டிங் பண்றீங்க என்று கமன்ட் செய்து இருந்தார்.
ஆனால், சிறிது நேரத்தில் அந்த பதிவை அந்த நபர் நீக்கிவிட்டார். இருப்பினும் அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பதிவிட்டுள்ள நகுல், உங்களின் நேர்மையை நான் பாராட்டுகிறேன். ஆனால் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். நான் நடிக்கவில்லை இதுதான் என்னுடைய சுபாவம். அனைவருக்கும் என்னை பிடிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. பல்வேறு ஜாம்பவான்களுக்கு முன்னாள் குழந்தைகள் பாடும் போது அவர்களுக்கு பதட்டம் அடைவார்கள். அந்த படத்தை நான் போக்குகிறேன் என்று குறிப்பிடுவது ஏன் உங்களுடைய கமெண்ட்டை நீக்கினார்கள் உங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.