உங்க மனைவி கேவலமா இருக்காங்க, அவங்க என்ன திருநங்கையா ? கேலி செய்தவருக்கு நகுல் கொடுத்த பதிலடி.

0
955
nakul
- Advertisement -

தன் மனைவியை திருநங்கையா என்று விமர்சித்த நபருக்கு பதிலடி கொடுத்த நகுலின் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் நகுல். இவர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் மாசிலாமணி, காதலில் விழுந்தேன், கந்தக்கோட்டை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். மேலும், இவர் நடிகர் மட்டுமில்லாமல் பின்னணி பாடகரும் ஆவார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-47-1024x722.jpg

அதுமட்டுமில்லாமல் நகுல் பிரபல நடிகை தேவயானியின் உடன் பிறந்த தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் இவர் பயங்கர குண்டாக இருந்தாராம். நடிப்பிற்காக இவர் தன்னுடைய உடலை பாதியாக குறைத்து நடிக்கத் தொடங்கினார். பின் இவர் பல ஆண்டுகளாக ஸ்ருதி என்பவரை காதலித்து வந்தார். பின் இவர்கள் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.

- Advertisement -

நகுல் அழகிய குடும்பம்:

இவர்களுக்கு ஒரு அழகிய பெண் குழந்தை இருக்கிறது. அந்த குழந்தைக்கு அகிரா என்று பெயர் வைத்துள்ளார்கள். சின்ன இடைவெளிக்கு பிறகு மீண்டும் நகுல் சின்னத்திரையில் ஜோடி நடுவராக இருந்தார். பின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் நடுவராகவும் களம் இறங்கி இருக்கிறார். இது ஒரு பக்கமிருக்க நகுலின் மனைவி சுருதி எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். சுருதி தன் கணவர் மற்றும் குழந்தையுடன் சேர்ந்து எடுக்கும் வீடியோக்களையும், புகைப்படங்களையும் அவ்வபோது சோசியல் மீடியாவில் அடிக்கடி பகிர்பவர்.

nakkh

ஸ்ருதி போட்ட வீடியோ:

இதனால் இவரை சோசியல் மீடியாவில் லட்சக்கணக்கான பேர் ஃபாலோ செய்கிறார்கள். இந்த நிலையில் சுருதி அவர்கள் ஆண், பெண் சமத்துவத்தை குறித்து வீடியோ ஒன்றை போட்டிருந்தார். இதற்கு பலரும் கருத்து தெரிவித்து இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் தான் போடும் வீடியோக்களுக்கு எதிர் மறையாக பேசுபவர்களுக்கு சுருதி நேரடியாக பதில் கொடுத்து வந்திருக்கிறார். இப்படி ஒரு நிலையில் நடிகர் நகுலுக்கு சில தினங்களாகவே ஸ்ருதி குறித்து போஸ்ட் வந்துகொண்டே இருக்கிறது.

-விளம்பரம்-

மனைவிக்கு பக்க பலமாக இருக்கும் நகுல் :

அதில் ஒரு சிலர் உங்களுடைய மனைவியை தயவுசெய்து கட்டுப்படுத்துங்கள் என்று கூறியிருக்கிறார்கள். உடனே இதற்கு விளக்கம் கொடுத்து நகுல் வீடியோ ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, எல்லோரும் என் மனைவியை கட்டுப்படுத்துங்கள் என்று மெசேஜ் அனுப்புகிறீர்கள். ஏன் நான் என் மனைவியை கட்டுபடுத்த வேண்டும்? நான் எப்படியோ அதே போல் தான் ஸ்ருதியும் இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் நான் ஒரு பெண்ணியவாதி என்று கூறி இருந்தார் நகுல்.

மனைவியை திருநங்கை என்று கேலி செய்த நபர் :

இப்படி ஒரு நிலையில் இன்ஸ்டாவாசி ஒருவர் ‘ bro, உங்க மனைவி மிகவும் கேவலமாக இருக்கிறார். அவங்க என்ன திருநங்கையா’ என்று கேவலமாக கமன்ட் செய்து இருந்தார். இதற்கு பதில் அளித்த நகுல் ‘என்னை Bro என்று அழைக்க வேண்டாம், உனக்கும் எனக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை. நீ வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாமல் இருக்க போகும் ஒரு கேவலமான குப்பை. நீ செய்யும் இதற்கு ஒரு நாள் அனுபவிப்பாய். அந்த நாள் ஏன் என்று உனக்கு புரியும். இதை செய்து கொண்டே இரு நீ ஒரு வெத்துவேட்டு’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement