இரண்டாம் குழந்தைக்கு தாயான நகுல் மனைவி – மகள் மற்றும் கணவருடன் வெளியிட்ட Cute Pregnancy போட்டோ ஷூட்.

0
698
nakul
- Advertisement -

கடந்த 2020 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்த நிலையில் தற்போது மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார் நகுல் மனைவி. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் நகுல். இவர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் மாசிலாமணி, காதலில் விழுந்தேன், கந்தக்கோட்டை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். மேலும், இவர் நடிகர் மட்டுமில்லாமல் பின்னணி பாடகரும் ஆவார்.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் நகுல் பிரபல நடிகை தேவயானியின் உடன் பிறந்த தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் இவர் பயங்கர குண்டாக இருந்தாராம். நடிப்பிற்காக இவர் தன்னுடைய உடலை பாதியாக குறைத்து நடிக்கத் தொடங்கினார். பின் இவர் பல ஆண்டுகளாக ஸ்ருதி என்பவரை காதலித்து வந்தார். பின் இவர்கள் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.

- Advertisement -

நகுல் அழகிய குடும்பம்:

இவர்களுக்கு ஒரு அழகிய பெண் குழந்தை இருக்கிறது. அந்த குழந்தைக்கு அகிரா என்று பெயர் வைத்துள்ளார்கள். சின்ன இடைவெளிக்கு பிறகு மீண்டும் நகுல் சின்னத்திரையில் ஜோடி நடுவராக இருந்தார். பின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் நடுவராகவும் களம் இறங்கி இருக்கிறார். இது ஒரு பக்கமிருக்க நகுலின் மனைவி சுருதி எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிறந்த மகள் :

சுருதி தன் கணவர் மற்றும் குழந்தையுடன் சேர்ந்து எடுக்கும் வீடியோக்களையும், புகைப்படங்களையும் அவ்வபோது சோசியல் மீடியாவில் அடிக்கடி பகிர்பவர்.இதனால் இவரை சோசியல் மீடியாவில் லட்சக்கணக்கான பேர் ஃபாலோ செய்கிறார்கள். இந்த நிலையில் சுருதி அவர்கள் ஆண், பெண் சமத்துவத்தை குறித்து வீடியோ ஒன்றை போட்டிருந்தார். இதற்கு பலரும் கருத்து தெரிவித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

இரண்டாம் முறை கர்ப்பமாக இருக்கும் நகுல் மனைவி :

அதுமட்டுமில்லாமல் தான் போடும் வீடியோக்களுக்கு எதிர் மறையாக பேசுபவர்களுக்கு சுருதி நேரடியாக பதில் கொடுத்து வந்திருக்கிறார். இப்படி ஒரு நிலையில் தற்போது இரண்டாம் முறையாக கர்ப்பமாக இருக்கிறார். சமீபத்தில் தன் மகன் மற்றும் கணவருடன் Pregnancy போட்டோ ஷூட்டை நடத்தி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது. மேலும், ரசிகர்கள் வாழ்த்தும் கூறி வருகின்றனர்.

Advertisement