சிவகார்த்திகேயன் தந்தை இறந்தததுக்கு முக்கிய காரணம் ஜெயலலிதா தான். அவர் மட்டும் ஒரு கையழுத்து போட்டிருந்தால் – நக்கீரன் கோபால்.

0
13733
sk
- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை கொலை செய்யப்பட்டதாக எச் ராஜா பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஜெயபிரகாஷ் என்ற ஜெயிலரை தற்போதைய பாபனாசம் எம்.எல்.ஏ கொலை செய்ததாகவும், பாதிக்கப்பட்டவரின் மகன் நடிகர் சிவகார்த்திகேயன் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த தகவல் சிவகார்த்திகேயன் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் சிவகார்த்திகேயனின் தந்தையின் பெயர் உண்மையில் ஜி. தாஸ் மற்றும் அவரது மரணம் இயற்கையானது என தகவல் வெளியாகியது. இப்படி ஒரு நிலையில் சிவகார்த்திகேயன் தந்தை மரணம் குறித்து பல அதிர்ச்சியான தகவல்களை கூறியுள்ளார் நக்கீரன் கோபால்.

-விளம்பரம்-

இதுகுறித்து நக்கீரன் யூடுயூப் பக்கத்தில் வெளியிடபட்டுள்ள வீடியோவில் நக்கீரன் கோபால் பேசியுள்ளதாவது, சிவகார்த்திகேயன் தந்தையின் உண்மையான பெயர் ஜெயபிரகாஷ் இல்லை அவர் பெயர் தாஸ். மூதேவி தெரிஞ்சா பேசணும். ஒரு திருமண பத்திரிக்கை வைப்பதற்காக சிவகார்த்திகேயன் வீட்டிற்கு சென்றபோது அங்கே இருந்த தாஸ் புகைப்படத்தை கண்டு சிவகார்த்திகேயனிடம் ‘யோவ் நீ தாஸ் மகனா உன்னுடைய வேலை விஷயமாக தான் உன் தந்தை என்னிடம் சொல்லி இருந்தார்’ என்று கூறினேன் அதற்கு அவரும் ஆமாம் அண்ணே நான் தாஸ் மகன்தான் என்று கூறினார்.

இதையும் பாருங்க : ரெண்டு ஆண்டுக்கு முன்னரே இப்படி நடந்துச்சு, ஆனால், இந்த முறை ரொம்ப பயமா இருக்கு. பாலியல் தொல்லை குறித்து அஞ்சனா புகார்.

- Advertisement -

சந்தன கடத்தல் வீரப்பன் கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்திய போது நான்தான் இரண்டு மாநில அரசின் சார்பாக வீரப்பனிடம் தூதுவராக சென்றேன் அப்போது வீரப்பன் திருச்சி சிறையில் இருக்கும் ஐந்து தமிழ் தீவிரவாதிகளை விடுதலை செய்தால் ராஜ்குமாரை விடுவிக்கிறேன் என்று கூறி இருந்தார். அப்போது திருச்சியில் பணியாற்றிய சிறை அதிகாரியானதாஸை நான் சந்திக்க சென்றேன். அப்போது என்னிடம் பேசிய அவர் என்னுடைய மகனுக்கு படித்து முடித்தவுடன் ஏதாவது வேலை வாங்கித் தருவதாக சொன்னார். அதேபோல அவனுக்கு பலகுரலில் பேசுவார் என்றும் என்னிடம் சொன்னார்.

நானும் பாத்துக்கலாம்ண்ணே எதாவது ஒரு டிவில வேலை வாங்கிடலாம்னு சொன்னேன். வீரப்பன் விவகாரத்தின் போது சொன்னார் பின்னர் 2001ல் ஜெயலலிதா ஆட்சி வந்தபோது என் மீது பல பொய் வழக்குகளை போட்டார். அப்போது நான் தலைமறைவாக இருந்த போது தாஸிடம் உதவி கேட்டார்கள். அப்போது அவர் கோயம்புத்தூர் சிறையில் அதிகாரியாக இருந்தார். என் மீது போட்ட வழக்கில் இருந்து தப்பிக்க நான் தலைமறைவாக இருந்த போது எனக்கு ஒரு அழைப்பு வருகிறது தாஸ் நெஞ்சுவலி காரணமாக இறந்துவிட்டார் என்று சொன்னார்கள்.

-விளம்பரம்-

அப்போது நான் நல்ல ஆரோக்கியமான மனிதர் எப்படி இறந்தார் என்று நான் வியப்படைந்தேன். அப்போதுதான் எனக்கு தெரியவந்தது, தாஸ் திருச்சி சிறையில் இருந்தபோது வீரப்பன் தன்னிடம் ஒப்படைக்க சொன்ன அந்த 5 தீவிரவாதிகள் நான் மற்றும் கலைஞர் ஆகிய இருவர்தான் ராஜ்குமார் கடத்தல் வீரப்பனுக்கு திட்டம் போட்டு கொடுத்ததாக எழுதித் தரும்படி திருச்சி சிறையில் அதிகாரியாக இருந்து வந்த தசை டார்ச்சர் செய்து இருக்கிறார்கள்.

ஆனால் தாஸ் மிகவும் நேர்மையானவர் அவர் நினைத்திருந்தால் ஒரு கையெழுத்தைப் போட்டு இருக்கலாம். ஆனால்,அவர் அப்படி செய்யல, ஆனால் அவரை அப்படி செய்ய சொல்லி டார்ச்சர் மேல் டார்ச்சர் செய்ததால் தான்அவருக்கு அழுத்தத்தில் நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்துவிட்டார். அவரின் இறப்பிற்கு முக்கிய காரணமே ஜெயலலிதாவும் போலீஸ் அதிகாரி முகமது அலி என்பவர் தான் என்று தகவலை சொல்லியிருக்கிறார் நக்கீரன் கோபால்.

Advertisement