லூசு பயலே, மெண்டல் பயலே என்ன டா பன்னிட்டு இருக்க பிக் பாஸ் ஜோடிகள்ல – தன்னை கழுவி ஊற்றிய பெண்ணிற்கு நகுல் கொடுத்த பதிலடி.

0
2658
nakhul
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல்வேறு சகோதர சகோதரி நட்சத்திரங்கள் சினிமாவில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் சூர்யா – கார்த்தி, ஜீவா – ரமேஷ், அருண் விஜய் – வனிதா, சிம்ரன் – மோனால், நக்மா – ஜோதிகா இப்படி கூறிக்கொண்டே போகலாம், அந்த வகையில் தமிழ் சினிமாவில் தேவையணி மற்றும் நகுலும் ஒரு முக்கிய நட்சத்திர நடிகர்களாக திகழ்ந்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் சினிமாவில் 90-ஸ்களில் வெளிவந்த படங்களில் விஜய், அஜித், என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றவர் நடிகை தேவயானி.

-விளம்பரம்-

இவருக்கு இரண்டு தம்பிகள் உள்ளனர். அதில் நகுலும் நடிகர் என்பது பலரும் அறிந்த ஒன்று.தொடக்கத்தில் நடித்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் இப்போது வெற்றிக் கொடுக்க போராடிக் கொண்டிருக்கிறார். இறுதியாக செய் என்ற படத்தில் நடித்திருந்தார் நகுல். ஆனால், அந்த திரைப்படம் எதிர்பார்த்தபடி வரவேற்பை பெறவில்லை. தற்போது நடிகர் நகுல், எரியும் கண்ணாடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சுனைனா நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : Work Out செய்ய விடாமல் அன்புத்தொல்லை – தனது இரண்டு twins குழந்தையை வைத்து எக்ஸசைஸ் செய்த பரத் – ப்பா, எப்படி வளந்துட்டாங்க இந்த பசங்க.

- Advertisement -

நடிகர் நகுல் நடிகராக மட்டுமல்லாமல் ஒரு பாடகரும் கூட. இதுவரை தமிழில் 9 பாடல்களை பாடியுள்ளார். அந்நியன் படத்தில் வந்த காதல் யானை பாடல் மூலம் நடிகர் நகுல் பாடகராக அறிமுகமானார். இதனால் இவர் பல்வேறு நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்துள்ளார். இப்படி ஒரு நிலையில் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பெண் ஒருவர், லூசு பயலே, மெண்டல் பயலே என்ன டா பன்னிட்டு இருக்க பிக் பாஸ் ஜோடிகள்ல மெண்டல் மாதிரி பன்னிட்டு இருக்க, மூஞ்சியும் மொகரையும் செத்தப்பயலே நீ நிகழ்ச்சியில் எரிச்சலாக செஞ்சுட்டு இருக்க என்று கமன்ட் செய்தார். ரசிகையின் இந்த கமன்ட்டிற்கு பதில் அளித்த நகுல், இப்போ சந்தோசமா ? நல்ல உணர்கிறீர்களா ? இப்படி பேசினால் என்னை ஒன்றும் செய்யப்போவது இல்லை. உன்னை நினைத்து தான் பாவமாக இருக்கிறது. உனக்கு புடிக்கவில்லை என்றால் வேற ஷோ பாரு. இது மோசமான வளர்ப்பின் அறிகுறி போய் மருத்துவரை பார் என்று பக்குவமாக கலாய்த்து உள்ளார்.

-விளம்பரம்-
Advertisement