நகுலுடன் மூன்றாவது முறையாக ஜோடிசேரும் பிரபல நடிகை.! படத்தின் இயக்குனர் இவர்தான்.!

0
156

நடிகர் நகுல் மற்றும் நடிகை சுனைனா ஆகிய இருவருமே தமிழ் சினிமாவில் கதாநாயகனாகவும், கதாநாயகியாகவும் அறிமுகமானது கடந்த 2008 ஆம் வெளியான “காதலில் விழுந்தேன்” என்று படம் மூலம் தான். அதன் பின்னர் இவர்கள் இருவரும் இணைந்து 2009 ஆம் ஆண்டு “மாசிலாமணி” என்ற படத்திலும் நடித்திருந்தனர்.

தறபோது இவர்கள் இருவரும் மூன்றாவது முறையாக மற்றும் ஒரு தமிழ் படத்தில் ஜோடி சேர உள்ளனர். இந்த படத்தை இயக்குனர் சச்சின் தேவ் என்பவர் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கான பாடல்களை வைரமுத்து எழுதவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த படத்தில் பணிபுரியும் சக கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நடிகர் நகுல் “செய்” என்ற படத்திலும், நடிகை “சுனைனா” எனை நோக்கி பாயும் தோட்ட ” படத்தில் நடித்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் தற்போது நடித்து வரும் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்தவுடன், நகுல் மற்றும் சுனைனா நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்புகள் வரும் அக்டோபர் மாதம் துவங்கயிருப்பதாக தகவல்கள் வெளியாகயுள்ளது.