தென்னிந்திய சினிமா உலகில் 80 கால கட்டங்களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை நளினி. மேலும், இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி திரைப் படங்களில் நடித்து உள்ளார். அதுவும் இவர் மோகன்லால், மம்மூட்டி, விஜயகாந்த், சத்யராஜ் மற்றும் மோகன் என சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் நடிகை நளினியின் தந்தை அவர்கள் சினிமாவில் பிரபலமான டான்ஸ் மாஸ்டர் ஆவார். மேலும், நடிகை நளினி அவர்கள் பள்ளிப் பருவத்திலேயே சினிமாவிற்கு அறிமுகமானார். பின் இவர் சினிமாவிற்கு வந்த உடன் தன்னுடைய பள்ளிப் படிப்பை மூட்டை கட்டி வைத்து விட்டார். மேலும், இவர் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். இதனை தொடர்ந்து நடிகை நளினி அவர்கள் சினிமாவில் பிரபலமான நடிகர் ராமராஜனை 1987 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

மேலும், இந்த தம்பதிகளுக்கு அருணா மற்றும் அருண் என்ற இரண்டு வாரிசுகள் உள்ளார்கள். இப்படி போய் கொண்டு இருக்கும் போது இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின் 2000 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். சமீபத்தில் நடிகை நளினி அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் நடிகர் ராமராஜனை திருமணம் செய்தது குறித்து பேசி உள்ளார். அதில் அவர் கூறியதாவது, நான் சினிமா உலகில் நடிகையாக இருந்த போது ராமராஜன் அவர்கள் சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றினார். மேலும், அவருக்கு என்னை ரொம்ப பிடிக்கும் என்பதை ஒரு நாள் படப்பிடிப்பில் தளத்தில் தெரிந்து கொண்டேன்.

இதையும் பாருங்க : பிரபல நடிகர் பிரேமிற்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா. புகைப்படம் இதோ.

அது என்னவென்றால் படப்பிடிப்பு தளத்தில் அவர் என்னிடம் இந்த டிரஸ் உங்களுக்கு ரொம்ப அழகா இருக்குங்க. நாளைக்கும் இதே போட்டுடு வாங்க என்று கூறினார். நானும் இதே மாதிரி போட்டுட்டு வந்தேன். அவர் நாம் சொல்லித் தான் இவர்கள் செய்தார் என என் மீது காதலை வளர்த்துக் கொண்டார். அதற்குப் பிறகு’ மனைவி சொல்லே மந்திரம்’ படத்தின் சூட்டிங் நடந்து கொண்டிருந்தது. அப்போது அவர் பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சென்று குங்குமத்தை கொண்டு வந்தார். மேலும், அந்த குங்குமத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று என்னிடம் சொன்னார். ஆனால், அப்போது என் கையில் மருதாணி இருந்ததால் நீங்களே வைத்து விடுங்கள் எனக் கூறினேன். இதன் மூலம் என் மீது உள்ள காதல் அவருக்கு அதிகமானது. ஆனால், இதெல்லாம் எதேச்சையாக நடந்த சம்பவங்கள்.

Advertisement

Advertisement

ஆனால், அவர் மனதில் காதலாக வளர்ந்தது. இதனை தொடர்ந்து அவர் என்னுடைய வீட்டிற்கு பெண் கேட்டு வந்துள்ளார். என் குடும்பத்தினர் அவரை அடித்து உதைத்து திட்டி அனுப்பி விட்டார்கள். இந்த சம்பவத்தை என்னிடம் வந்து அவர் கூறினார். இப்படி அடி வாங்குகிறார் என்று நினைத்து வருத்தப்பட்டேன். பின் நாம் ஏன் அவரை திருமணம் செய்யக்கூடாது? என்றும் எனக்கு தோன்றியது. அதுமட்டுமில்லாமல் அந்த நேரத்தில் தான் என்னுடைய நண்பர்கள் எல்லோருக்கும் திருமணம் நடந்து கொண்டிருந்தது. அப்போது எனக்கும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையும் வந்தது. அந்த நேரத்தில் அவர் திருமணம் செய்து கொள்ளலாமா? என்று கேட்ட போது நானும் ஓகே என்று சொல்லிவிட்டேன். திருமணத்துக்குப் பின்னர் தான் நான் அவரை காதலிக்க தொடங்கினேன் என்று புன்னகைத்து வெட்கத்துடன் கூறினார்.

Advertisement