பிரபல நடிகர் பிரேமிற்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா. புகைப்படம் இதோ.

0
24206
Prem

தென்னிந்திய சினிமா உலகில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிப்பவர்கள் மக்களிடையே பிரபலமாவது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். அதிலும் ஒரு சில பேர் மட்டும் தான் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருப்பார்கள். அந்த வகையில் வந்தவர் தான் நடிகர் பிரேம். இவர் பெரும்பாலும் படங்களில் குணச்சித்திர வேடங்களில் தான் நடித்து உள்ளார். மேலும், பலரின் ஃபேவரட் நடிகர் என்ற பட்டத்தையும் பெற்று உள்ளார். மேலும், நடிகர் பிரேம் அவர்கள் விஜய், சூர்யா என சினிமா துறையில் உள்ள முன்னணி நட்சத்திரங்களின் படத்தில் நடித்து உள்ளார். நடிகர் பிரேம் அவர்கள் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது கூட நடிகர் பிரேம் அவர்கள் விஜய் அவர்களின் நடிப்பில் வரும் “தளபதி 64” படத்தில் நடித்துக் கொண்டு உள்ளார்.

Image result for actor prem son
பிரேம் அருகில் இருப்பது தான் பிரேமின் மகன்

மேலும், “தளபதி 64” படத்தின் படப்பிடிப்புகள் மும்முரமாக போய் கொண்டிருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் நடிகர் பிரேம் அவர்கள் தன் மகன் கௌஷிக் உடன் இணைந்து சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்று அளித்து உள்ளார். மேலும்,அந்த பேட்டியில் அவர்கள் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து உள்ளார்கள். அதுமட்டும் இல்லாமல் நடிகர் பிரேமை பார்த்து பலரும் உங்களுக்கு இவ்வளவு பெரிய மகனா?? என்று கேள்வி கேட்டு வருகின்றனர். அதிலும் அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. நடிகர் பிரேம் அவர்களுக்கு சிறுவயதிலேயே திருமணம் ஆகிவிட்டதாம் அதனால் தான் இவருக்கு இவ்வளவு பெரிய இரண்டு மகன்கள் என்றும் கூறினார். மேலும், இந்த கேள்வியை பலர் கேட்டுள்ளார்கள் என்றும் கூறி உள்ளார்கள்.

- Advertisement -

அதுமட்டும் இல்லாமல் நடிகர் பிரேம் அவர்கள் எப்போதும் நன்றாக உறங்கி, சரியான உணவுகளை சாப்பிட்டு உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருவாராம். அதனால் தான் தற்போது கூட இளமையாக தெரிகிறார் என்று அவருடைய மகன் கௌஷிக் கூறினார். அது மட்டுமில்லாமல் அவருடைய மகன் கௌஷிக் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து உள்ளார். அனைவருக்கும் தெரிகிற மாதிரி சொன்னால் சத்யராஜ் ரம்பா நடிப்பில் வெளிவந்த ‘குங்குமப் பொட்டு கவுண்டர்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக பிரேம் அவர்களின் பையன் கௌஷிக் நடித்து உள்ளார். மேலும்,அதில் பிரேம் அவர்கள் கூறியது, நான் தலை மற்றும் தலைவரோடு தான் நடித்ததில்லை. எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தேன் அவர்களுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆனால், அவர்களுடன் நிறைய விஷயங்களை பகிர்ந்து உள்ளேன். ஒருமுறை வீரம் படத்தின் போது நான் தல அஜித்திடம் நான்கு மணி நேரம் பேசினேன். அதில் பல சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்து கொண்டேன். அது மட்டுமில்லாமல் தல அஜித் இடம் எந்த விஷயம் பற்றி கேட்டாலும் அவர் டக்கு டக்கு என்று சொல்லுவார். அந்த அளவிற்கு புத்திசாலியும் திறமையும் கொண்டவர். மேலும், நான் என் வாழ்க்கையில் இவ்வளவு தூரம் வந்து இருப்பதற்கு தல சொன்ன டயலாக் தான். அது “நெவர் எவர் கிவ் அப்” தான் என்று அஜித்தை பற்றி பெருமையாக பல விஷயங்களை கூறியிருந்தார்.

-விளம்பரம்-
Advertisement