பழம்பெரும் நடிகர் நம்பியாரின் மகள் நடித்திருக்கும் சீரியல் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான பழம்பெரும் நடிகராக திகழ்ந்தவர் நம்பியார். இவர் கேரளாவை சேர்ந்தவர். இவர் ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அதற்கு பிறகு தான் இவருக்கு திரைப்படங்களில் வாய்ப்பு வந்தது. பெரும்பாலும், இவர் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் தான் மிரட்டி இருந்தார்.

சொல்லப்போனால், தமிழ் திரை உலகில் வில்லன் என்றாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது நம்பியார் தான். அந்த அளவிற்கு கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தி இருந்தார் நம்பியார். மேலும், இவர் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரை உலகில் பயணித்திருக்கிறார். இவர் படங்களில் குணச்சித்திரம், வில்லன் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இவர் திரைப்படங்களில் வில்லனாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் இவர் ஹீரோ என்று சொல்லலாம்.

Advertisement

நம்பியார் திரைப்பயணம்:

இவர் சிறந்த ஆன்மீகவாதியாகவும் இருந்தார். இவர் தீவிர ஐயப்பன் பக்தர். தொடர்ந்து இவர் 65 ஆண்டுகளுக்கு மேலாக சபரிமலைக்கு சென்று இருந்தார். பின் 2008-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி உடல்நலம் குறைவால் இறந்தார். அதுவும் ஐயப்பனுக்கு விரதம் மேற்கொள்ளும் கார்த்திகை மாதத்தில் அவர் மரணம் அடைந்ததால் ஐயப்பனின் திருவடிகளை அவர் அடைந்ததாகவே கூறி இருந்தார்கள். இந்நிலையில் சமீப காலமாக நம்பியார் குடும்பம் குறித்த தகவல் வைரலாகி வருகிறது.

நம்பியார் குடும்பம்:

அதாவது, நடிகர் நம்பியார் அவர்கள் 1946 ஆம் ஆண்டில் தன்னுடைய உறவுக்காரப் பெண்ணான ருக்மணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன் ஒரு மகள் இருக்கிறார்கள். அதில் ஒரு மகன் உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இன்னொரு மகன் பெயர் சுகுமாரன். இவர் அகில இந்திய ஐயப்ப சேவ சங்க தலைவர் ஆவார். அதுமட்டுமில்லாமல் இவர் பாஜக தேசிய நிர்வாக குழு உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.

Advertisement

நம்பியார் மகன்:

இவர் ராணுவத்தில் பயிற்சியாளராக பணியாற்றியிருந்தார். கடந்த 2012 ஆம் ஆண்டு இவர் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவருக்கு இரண்டு மகன்களும் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இவருடைய மகள் பெயர் சினேகா. இவரும் ஒரு நடிகை தான். இவர் தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த ஆதி படத்திலும், விஷாலின் வெடிப்படத்திலும் குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கிறார்.

Advertisement

நம்பியார் மகள்:

அது மட்டும் இல்லாமல் இவர் சீரியல்களிலும் நடித்திருக்கிறார். அகல்யா, செல்லமே போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறார். அதற்குப்பின் இவர் ஈஸ்வர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தற்போது சினேகா தன்னுடைய குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகியிருக்கிறது. இதை பார்த்த பலருமே இவர் தான் நம்பியாரின் மகளா! என்று ஆச்சரியத்தில் லைக்ஸ்குகளை குவித்து வருகிறார்கள்.

Advertisement