குஜராத்ல பொறந்துட்டு தமிழ் வருஷத்த பத்தி பாடம் எடுக்க தேவை இல்லை – நமீதாவை விமர்சிக்கும் தமிழர்கள்.

0
400
namitha
- Advertisement -

ஏப்ரல் 14 தான் நம்முடைய புத்தாண்டு என்று நமிதா வெளியிட்டு இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் நமீதா. சொல்லப்போனால், இவர் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர். தமிழில் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா என்ற படத்தின் மூலம் தான் நமீதா அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார் .

-விளம்பரம்-

மேலும், நமீதா சினிமாவில் அறிமுகமான முதல் படத்திலேயே இளைஞர்களின் மனதில் தனெக்கென ஓரு இடத்தை பிடித்து விட்டார். அதன் பின் இவர் சினிமாவில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தார். இவர் அனைவரையும் ‘மச்சான்’ என்று தான் செவ்லமாக அழைப்பார். அதனால் தான் இவர் பெரிய அளவுக்கு பிரபலம் ஆனார் என்றும் சொல்லலாம். மேலும், இவர் தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சரத் குமார் , சத்யராஜ் , விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

நமீதா திரைப்பயணம்:

பிறகு நமிதாவிற்கு சினிமா பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது. இதனால் இவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்து வந்தார். அதன் பின் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார். இதன் மூலமாவது பட வாய்ப்புகள் கிடைக்குமா? என்று காத்திருந்தார் நமீதா. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் இவருக்கு பெரிதாக சினிமா பட வாய்ப்புகள் அமையவில்லை.

நமீதா திருமணம்:

பின் இவர் 2017 ஆம் ஆண்டு தனது காதலர் வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு சமீபத்தில் தான் இரட்டை ஆண்குழந்தை பிறந்தது. அதே போல நடிகை நமீதா பா ஜ க கட்சியில் சேர்ந்து பிரச்சாரம் செய்தார் இதற்கிடையே சொந்தமாக ஓடிடி தளத்தை நமீதா உருவாக்கி இருக்கிறாராம். அந்த ஓடிடி தளத்தில் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படங்கள் மட்டுமே வெளியிடப்படுகிறது. தற்போது இவர் பவ் பவ் என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

நமீதா வெளியிட்ட வீடியோ:

இந்த நிலையில் நமிதா வெளியிட்டிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, ஏப்ரல் 14ஆம் தேதி தான் நம்முடைய புத்தாண்டு. டிசம்பர் 31ஆம் தேதி நம்முடைய புத்தாண்டு கிடையாது. ஆகவே, அனைவரும் ஏப்ரல் 14ஆம் தேதி அன்று காலையில் எழுந்து குளித்து கோவிலுக்கு சென்று இறைவனிடம் ஆசிர்வாதம் வாங்குங்கள். பெரியவர்களிடம், உங்களுடைய பெற்றோர்களிடம் ஆசிர்வாதம் வாங்குங்கள்.

புத்தாண்டு தினம்:

இதுதான் நம்முடைய கலாச்சாரம். ஏப்ரல் 14ஆம் தேதி தான் நம்முடைய புத்தாண்டு. இந்த ஆண்டு இனிய நாளாக அமைய அனைவருக்குமே என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கூறி இருக்கிறார். இப்படி இவர் பேசியிருக்கும் வீடியோவிற்கு பலர் ஆதரவு தெரிவித்து வந்தாலும் ஒரு சிலர் குஜராத்தில் பிறந்துவிட்டு தமிழ் வருடப்பிறப்பு பற்றி எங்களுக்கு பாடம் எடுக்குற என்று சிலர் விமர்சித்து வருகின்றனர்.

Advertisement