நமீதாவை இதுவரை யாரும் சரியாக பயன்படுத்தவில்லை – நமீதா கணவர் ஆதங்கம்.

0
375
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் நமீதா. சொல்லப்போனால், இவர் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர். தமிழில் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா திரைப் படத்தின் மூலம் தான் அறிமுகமான நமீதா தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, அங்குஇலம் என பல மொழிபடங்களில் நடித்துவிட்டார். நமீதா சினிமாவில் அறிமுகமான முதல் படத்திலேயே இளைஞர்களின் மனதில் தனெக்கென ஓரு இடத்தை பிடித்து விட்டார்.

-விளம்பரம்-

அதன் பின் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தார். இவர் அனைவரையும் ‘மச்சான்’ என்று தான் செல்லமாக அழைப்பார். அதனால் தான் இவர் பெரிய அளவுக்கு பிரபலம் ஆனார் என்றும் சொல்லலாம். மேலும், இவர் தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சரத் குமார் , சத்தியராஜ் , விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து இருக்கிறார். பிறகு நமிதாவிற்கு சினிமா பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது.

- Advertisement -

நமீதா திருமணம்:

இதனால் இவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்து வந்தார். அதன் பின் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கு பெற்றார். இதன் மூலமாவது பட வாய்ப்புகள் கிடைக்குமா? என்று காத்திருந்தார் நமீதா. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் இவருக்கு பெரிதாக சினிமா பட வாய்ப்புகள் அமையவில்லை. பின் இவர் 2017 ஆம் ஆண்டு தனது காதலர் வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்க்ளுக்கு சமீபத்தில் தான் இரட்டை ஆண்குழந்தை பிறந்தது.

மாற்றுத்திறனாளிகள் நிகழ்ச்சி :

இதற்கிடையே சொந்தமாக ஓடிடி தளத்தை நமீதா உருவாக்கி இருக்கிறாராம். அந்த ஓடிடி தளத்தில் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படங்கள் மட்டுமே வெளியிடப்படுகிறதாம். இந்த நிலையில் தான் சமீபத்தில் சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நமீதா தன்னுடைய கணவர் வீரேந்திர சௌத்ரியுடன் கலந்து கொண்டார்.

-விளம்பரம்-

பவ் பவ் படம் :

மேலும் இந்த நிகழ்ச்சியில் பேசிய நமிதா தாம் இப்போது “பவ் பவ்” என்ற படத்தில் நடித்து வருவதாகவும் இப்படத்தை தானே தயாரித்து இயங்குவதாகவும், இப்படம் முழுக்க முழுக்க செல்லப்பிராணிகளை விரும்பும் நண்பர்களுக்கான படம் என்றும் கூறினார். மேலும் இவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நாயின் உதவியுடன் கார் ஓட்டும் ஒருவர் கலந்து கொண்டார் அவரை போலவே தன்னுடைய படத்தில் ஒரு காட்சி இருக்கும் என்றும் தன்னுடைய இந்தப்படம் விலங்குகள் நல விரும்பிகளுக்கு ஏற்ற படமாக இருக்கும் என்று கூறினார்.

நமீதா கணவர் ஆதங்கம் :

இதனையடுத்து பேசிய நமிதாவின் கணவர் வீரேந்திர வீரேந்திர சௌத்ரி “பவ் பவ்” படத்தில் நமீதா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறினர். மேலும் நமிதாவை யாரும் சினிமாவில் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றும் அவரை கிளாமர் நடிகையாக மட்டுமே கமர்சியல் படங்களில் பயன்படுத்தினார்கள். ஆனால் “பவ் பவ்” படம் நமிதாவின் முழு நடிப்பு திறமையை காட்டும் படமாக இருக்கும் என்று தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்தார். நமீதா நடிக்கும் இந்த “பவ் பவ்” திரைப்படத்தில் இதிவரையில் கவற்சியாக இருந்த நமிதாவை நல்ல முறையில் காட்ட அவருடைய கணவர் எடுக்கும் “கரணம் தப்பினால் மரணம்” சோதனைதான் இது.

Advertisement