பட வாய்ப்புகள் இல்லாததால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்து வந்தார்.கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார். இந்நிலையில் நடிகை நமீதா `அகம்பாவம்' என்ற புதிய படத்தில் கதாநாயகியாக கமிட் ஆகியுள்ளார்.
ஸ்ரீமகேஷ் இயக்கும் இந்த படத்தில் படத்தின் தயாரிப்பாளரான வாராகி, கொடூரமான வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன், மனோபாலா, மாரிமுத்து, அப்புக்குட்டி, நாடோடிகள் கோபால், ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த படத்திற்காக 10 கிலோவுக்கு மேல் உடல் எடையைக் குறைத்துள்ளார்.




