தாடி மீசை, சிக்ஸ் பேக் – நந்தா படத்தில் வந்த குட்டி சூர்யாவா இது. வேற லெவல் Transformation

0
3178
- Advertisement -

சினிமாவை பொறுத்த வரை எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் தற்போது நடிகர் நடிகைகளாக வலம் வந்து கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் நந்தா படத்தில் சிறு வயது சூர்யாவாக நடித்த இவரும் தற்போது ஒரு நடிகராக திகழ்ந்து வருகிறார். பாலா இயக்கத்தில் வெளியான ‘நந்தா’ திரைப்படம் சூர்யாவிற்கு ஒரு மிகப்பெரிய திருப்பு முனை படமாக அமைந்து இருந்தது. இந்த படத்தில் சிறு வயது சூர்யாவாக நடித்தவர் வினோத் கிஷன்.

-விளம்பரம்-
Image

நந்தா படத்திற்கு பின்னர் இவர் தமிழில் சமஸ்தானம், கிரீடம் போன்ற படங்களில் நடித்து இருந்தார். அதன் பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘நான் மஹான் அல்லா’ படத்தில் குட்டி வில்லன்களில் ஒருவராக நடித்து தனது நடிப்பை நிரூபித்தார். இந்த திரைப்படத்திற்காக இவருக்கு சிறந்த அறிமுக வில்லன் என்ற விருதும் கிடைத்தது.

இதையும் பாருங்க : Ullu வெப் தொடரில் அரை நிர்வாண காட்சியில் நடித்துள்ள கோமாளி பட பஜ்ஜி கடை ஆன்டி.

- Advertisement -

‘நான் மஹான் அல்ல’ படத்தை தொடர்ந்து இவர் ஜீவா, இமைக்கா நொடிகள் போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். ஆனால், இவருக்கு லீட் கதாபாத்திரம் இதுவரை அமையவில்லை. இறுதியாக கைதி பட நடிகர் அர்ஜுன் தாஸ் நடித்த ‘அந்தகாரம்’ படத்தில் ஒரு செகண்ட் ஹீரோவாக நடித்து இருந்தார்.

Image

இந்த படத்தில் இவர் பார்வை தெரியாத நபராக சிறப்பாக நடித்து இருந்தார். இறுதியாக குட்டி ஸ்டோரி என்ற அந்தாலஜி படத்தில் நடித்து இருந்தார். தற்போது ஹீரோவாக முழு முயற்சியை செய்து வரும் இவர் சமீபத்தில் தனது உடல் எடையை கூட்டி படு கட்டுமஸ்தாக மாறி இருக்கிறார். இவரது லேட்டஸ்ட் Transformation-ஐ கண்டு ரசிகர்கள் பலரும் வியந்து போய்யுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement