நித்யா ராமிர்க்கே டப் கொடுக்கும் அழகு – Transperant உடையில் நந்தினி சீரியல் நடிகை.

0
2338
- Advertisement -

சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற தொடர்களில் நந்தினியும் ஒன்று. இந்த தொடரை குஷ்பு அவர்கள் தயாரித்திருந்தார். இந்த நந்தினி தொடர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்தியாவில் பல மொழிகளில் ஒளிபரப்ப செய்யப்பட்டு உள்ளது. மேலும், இந்த தொடரில் கதாநாயகியாக நடிகை மாளவிகா வேல்ஸ் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை மாளவிகா வேல்ஸ் புகைப்படம் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ் மழை பொழிந்து வருகிறது. நடிகை மாளவிகா வேல்ஸ் அவர்கள் திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் தொலைக்காட்சி நடிகையும் ஆவார்.

-விளம்பரம்-

இவர் பாரம்பரிய நடனக் கலைஞரும் ஆவார். இவர் கேரளாவை சேர்ந்தவர். மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் என்ற திரைப்படம் மூலம் தான் இவர் சினிமா துறைக்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் சின்னத்திரையில் நடிக்கத் தொடங்கினார். இவர் தமிழில் சின்னத்திரையில் ஒளிபரப்பான நந்தினி சீரியலில் ஜானகி(ஆவி) என்ற கதாபாத்திரத்தில் நடித்த இருந்தார். இந்த தொடரின் மூலம் இவர் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.இந்த சீரியல் தெலுங்கு, மலையாளத்தில் டப் செய்யப்பட்டு வருகிறது. தற்போது இவர் அம்முவின்டே அம்மா என்ற மலையாள சீரியலில் லீட் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

மேலும், மலையாளத்தில் இவர் நடிக்கும் சீரியல்களில் இவரே தான் பேசிக் கொள்வார். ஆனால், இந்த நந்தினி சீரியல் தற்போது மலையாளத்தில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. ஆனால், இவர் கதாபாத்திரத்திற்கு இவருக்கு பதில் இன்னொருத்தர் டப்பிங் பேசுகிறாராம். ஏன்னா, மாதத்தில் 20 நாட்கள் அம்மணி படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால் அவருக்கு டப்பிங் பேச போதிய நேரம் கிடைக்கவில்லை. அதனால் இவரால் மலையாளத்தில் ஒளிபரப்பாகி வரும் நந்தினி சீரியலில் டப் பேச முடியவில்லை. அது மட்டுமில்லாமல் தனது தாய்மொழி மலையாளத்தில் வெளியாகும் நேரடி தொடரில் தனக்கு பதில் வேறு ஒரு நபர் டப்பிங் கொடுப்பது மனதளவில் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று சமீபத்தில் கூறினார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க அம்மினி தன்னுடைய போட்டோஷூட் புகைப்படத்தை தற்போது சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இப்படி இவர் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் அடிக்கடி சோசியல் மீடியாவில் தன்னுடைய போட்டோக்களை பகிர்ந்து வருவார். அந்தவகையில் தற்போது அம்மணி பதிவிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் எக்கச்சக்க லைக்குகளையும் கமெண்ட்டுகளை அள்ளி தெளித்து வருகின்றனர். அதிலும் சில பேர் இவருடைய புகைப்படத்தை பார்த்து இவருடைய அழகை வர்ணித்து கவிதைகளை கிறுக்கி தள்ளி வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement