இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 2012 வெளியான அட்டாகாத்தி என்ற படத்தில் நடிகர் தினேஷிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அந்த படத்திற்க்கு பிறகு விஜய்நடித்த ‘புலி’ படத்தில் அப்பா விஜய்க்கு மனைவியாகவும் நடித்திருந்தார்.
மேலும் விஜய் சேதுபதி நடித்த “இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா ” என்ற படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மனதில் நிலைத்து நின்றார். புலி படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்ததால் என்னவோ இவருக்கும் மீண்டும் அம்மா கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
புது முக இயக்குனர் கீதா ராஜ்புட் என்பவரின் இயக்கத்தில் நடிக்கப்போகும் இவர், அந்த படத்தில் 7 வயது பையனுக்கு அம்மாவாக நடிக்க உள்ளாராம். இதற்காக தனது உடல் எடையை 8 கிலோ குறைத்துள்ளாராம். இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் மிகுந்த சவாலாகவும், வித்யாசமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் விஜய் வசந்த், எம் எஸ் பாஸ்கர் போன்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்களாம்.
தற்போது தமிழில் 3 படங்களும் கன்னடத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை ஸ்வேதா கிழத்தி டிரௌசரில் போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.