சிவகார்த்திகேயன் ஸ்பைடர் மேன், சூர்யா கேப்டன் அமெரிக்கா – நடிகர் நானி சொல்ல காரணம் என்ன?

0
214
- Advertisement -

Hit 3 பட ப்ரொமோஷனின் போது தென்னிந்திய நடிகர்களை ஹாலிவுட் ரேஞ்சுக்கு நானி ஒப்பிட்டு பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நானி. இவர் தமிழில் நான் ஈ மற்றும் ஆஹா கல்யாணம் போன்ற சில படங்களில் தான் நடித்து இருந்தார். இந்த படங்கள் எல்லாம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இருந்தாலும், இவர் அதிகம் தெலுங்கு மொழி படங்களில் தான் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. அந்த வகையில் சமீபத்தில் இவர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் வெளியாகி இருந்த சரிபோதா சனிவாரம் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை டிவிவி தனய்யா தயாரித்திருந்தார். இந்த படத்தில் நானி உடன் பிரியங்கா மோகன், எஸ்.ஜே. சூர்யா, அதிதி பாலன், சாய்குமார், சுபலேகா சுதாகர் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

- Advertisement -

ஹிட் 3:

இதைத் தொடர்ந்து நானி அவர்கள் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது நான் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஹிட்: தேர்ட் கேஸ் (HIT: Third Case). இந்த படத்தை சைலேஷ் கொலனு என்பவர் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக ஸ்ரீநிதி செட்டி நடித்து இருக்கிறார். இந்த படம் மே 1ஆம் தேதி திரையரங்கிற்கு வெளியாக இருக்கிறது.

படத்தின் ப்ரோமோஷன்:

மேலும், இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக படக்குழுவினர் சென்னை, மும்பை, ஹைதராபாத், கொச்சி என்று பல பகுதிகளுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இந்த படம் தொடர்பாக ஸ்ரீநிதி, நானியும் சேர்ந்து பல பேட்டிகளில் சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து இருக்கிறார்கள். அப்படி அளித்த பேட்டியில் நானியிடம் அவெஞ்சர்ஸ் படத்தை இங்கு எடுத்து வந்தால் எந்தெந்த நடிகர்களை தேர்வு செய்வீர்கள் என்று கேட்டிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

நானி சொன்னது:

அதற்கு ஸ்ரீநிதி செட்டி, அவெஞ்சர்ஸ் கதாபாத்திரங்களின் பெயர்களை ஒவ்வொன்றாக சொன்னார். அதற்கு நானி தென்னிந்திய நடிகர்களை பதிலளித்திருக்கிறார். ஹல்க் என்றால் பிரபாஸ் அண்ணா, தார் என்றால் ராம்சரண், ஸ்பைடர் மேன் என்றால் சிவகார்த்திகேயன், கேப்டன் அமெரிக்கா என்றால் சூர்யா சார். பிளாக் பாந்தர் என்றால் அல்லு அர்ஜுன், ஆன்ட் மேன் என்றால் துல்கர் சல்மான், நான் தான் அயன் மேன் என்று பதில் அளித்திருக்கிறார்.

பாலிவுட் சினிமா:

அதோடு சமீபத்தில் அளித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் நானி, டப்பிங் செய்யப்படும் தென்னிந்திய படங்கள் தான் பாலிவுட்டை காப்பாற்றுகின்றது என்று சொல்வது தவறான வார்த்தை என்று நான் நினைக்கிறேன். இதை சமநிலைப்படுத்துவது என்பதுதான் சரியான வார்த்தையாக இருக்கும். சில நேரங்களில் தெலுங்கில் கூட இந்த மாதிரி ஒரு மந்தநிலை வரும். மூன்று, நான்கு மாதங்களுக்கு படங்கள் ஓடாமல் இருக்கும். இது இந்தியிலுமே நடக்கும். இப்போது நல்ல விஷயம் என்னவென்றால், மொழி எதுவாக இருந்தாலும் எல்லோரும் ஒரு நல்ல படத்தை விரும்புகிறார்கள் என்று கூறி இருக்கிறார்.

Advertisement