வாழை இலையில் கருகிய என் அம்மா உடலை கொடுத்தாங்க, தன் சிறு வயதிலேயே தற்கொலை செய்துகொண்ட தன் அம்மா குறித்து கண்ணீர் விட்ட நாஞ்சில் விஜயன்.

0
787
nanjil
- Advertisement -

விஜய் டிவி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது எது, கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு போன்ற பல்வேறு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். மேடை கலைஞராக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர் நாஞ்சில் விஜயன். பின் தன்னுடைய விடாமுயற்சியினால் விஜய் டிவியில் மிகப் பிரபலமான காமெடியனாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் லேடிஸ் கெட்டப்பில் தான் நடித்து இருக்கிறார். இதற்கென்றே நாஞ்சில் விஜயனுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்து இருக்கிறது. மேலும், இவர் விஜய் டிவியின் மூலம் கிடைத்த பிரபலத்தினால் சில படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

தற்போது இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் வள்ளி திருமணம் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலின் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் காமெடி நிகழ்ச்சியிலும் நாஞ்சில் விஜயன் பங்கேற்று வருகிறார். வத்திக்குச்சி என்ற வெப்சீரிஸ் ஒன்றில் நாஞ்சில் விஜயன் நடித்து வருகிறார். இதன் மூலம் இவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்து இருக்கிறது. இப்படி சின்னத்திரையில் படு பிசியாக கலக்கிக் கொண்டிருக்கும் நாஞ்சில் விஜயன் சமீபத்தில் புது கார் ஒன்று வாங்கி இருந்தார்.

- Advertisement -

நாஞ்சில் விஜயன் வாங்கிய புது கார்:

இதற்கு ரசிகர்கள் பலரும் நாஞ்சில் விஜயனுக்கு வாழ்த்துக்களை கூறி லைக்குகளை குவித்து இருந்தார்கள். இந்நிலையில் நாஞ்சில் விஜயன் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, கார் வாங்கினது என் வாழ்க்கையில் மிகப் பெரிய ஒரு விஷயம். இந்த கார் வாங்கிக் கொண்டு முதலில் நான் என்னுடைய அம்மா புகைப்படத்திற்கு முன் நின்று கார் வாங்கி விட்டேன், அம்மா வரீங்களா போகலாம் என்று அழுதேன். என் அம்மா இப்போது இல்லை ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. இருந்திருந்தால் என் அம்மாவை முன்னாடி உட்கார வைத்து ஒரு ரவுண்டு போய் இருப்பேன். அவர்கள் இதையெல்லாம் பார்த்ததுகூட இல்லை. அவர்களை நான் பைக்கில் கூட கொண்டு சென்றதில்லை.

நாஞ்சில் விஜயன் அளித்த பேட்டி:

அவர் இருந்திருந்தால் அவரை தான் அழைத்து சென்றிருப்பேன். அம்மா இல்லாதவனுக்கு மட்டும் தான் அந்த கஷ்டம் தெரியும். என்னுடைய நண்பர்களுக்கு அவங்க அம்மா கால் பண்ணும்போது பேசவில்லை என்றால் எனக்கு செம கோவம் வரும். இல்லாதவனுக்கு மட்டும் தான் அந்த அருமை தெரியும். நான் சின்ன வயதிலேயே என் அம்மாவை இழந்து விட்டேன். வாழை இலையில் கருகிய என் அம்மா உடலை என் கையில் கொடுத்தார்கள். இதை விட என் வாழ்க்கையில் அனுபவித்த கஷ்டம் கிடையாது. என் அம்மா போன பிறகு என் அப்பாவும் சோகத்தில் குடித்து போய்விட்டார். சொந்தக்காரர் வீட்டில் சொந்த ஊரிலேயே அனாதையாக தங்க இடம் இல்லாமல் கஷ்டப்பட்டேன். அரசு விடுதியில் தங்கி தான் படித்தேன்.

-விளம்பரம்-

தன் அம்மா குறித்து கூறியது:

விடுமுறையில் எங்கு செல்வது என்று தெரியாமல் யாருக்கும் தெரியாமல் விடுதிக்குள் ஒளிந்து தங்கி இருந்தேன். அவ்ளோ பெரிய விடுதியில் யாருமே இருக்க மாட்டார்கள். நான் ஒருவன் மட்டும்தான் எங்கு செல்வது என்று புரியாமல் இருப்பேன். அப்போதெல்லாம் அம்மாவை நினைத்து கத்தி கத்தி அழுவேன். ஏன் எனக்கு மட்டும் இந்த சோதனை என்று பல கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறேன். இப்போது வரும் பிரச்சனை எல்லாம் எனக்கு பெரிதாக தெரியவில்லை. சென்னைக்கு வரும்போது தங்க, சாப்பிட வழியில்லாமல் இருந்தேன். பின் போராடித்தான் இந்த இடத்திற்கு வந்தேன். அதுமட்டுமில்லாமல் நான் கார் வாங்குவதற்கு எங்கம்மா ஒரு காரணம் என்றால் இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது. என்னுடைய ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கும் நான் தங்கி இருக்கும் இடத்திற்கு ரொம்ப தூரம்.

கார் வாங்க காரணம்:

என்னுடைய சூட்டிங் இரவு 12 ,1 மணி அளவில் கூட முடியும். அப்போது எந்த வாகனமும் இருக்காது. ஒருமுறை என்னுடன் பணிபுரியும் நபரிடம், நீங்கள் அந்த வழியாக தானே செல்கிறீர்கள் என்னை டிராப் செய்து விடுங்கள் என்று சொன்னேன். அதற்கு அவர் இல்லை நான் வேறு வழியில் செல்கிறேன் என்று சொன்னார். அப்போது நான் வீட்டிற்கு போயி ரொம்ப யோசித்து கொண்டு புலம்பினேன். வண்டியில் இடம் இருந்தும், அந்த வழியாக வந்தும் நம்மை அழைத்துப் போகவில்லை என்றால் அந்த அளவிற்கு நாம் தகுதியில்லாத போய் விட்டோமோ? என்று நினைத்து வருத்தப்பட்டேன்.

வெப்சீரிஸ் குறித்து சொன்னது:

உடனே நாம் கார் வாங்க வேண்டும் என்ற வைராக்கியத்தினால் நான் கார் வாங்கினேன். நான் பெருமைக்காக சொல்லவில்லை, என்னுடைய வீட்டிற்கு போகும்போது வழியில் யார் நடந்து சென்றாலும் அவர்களை கூப்பிட்டு கொண்டு டிராப் பண்ணிவிட்டு தான் செல்வேன். அவர்கள் ரொம்ப நன்றி, சூப்பர் என்று சொல்லும் அந்த ஒரு சின்ன வார்த்தை எனக்கு சந்தோஷத்தை அளிக்கும். தற்போது என்னுடைய வெப்சீரிஸ் வத்திகுச்சி நன்றாக போய்க் கொண்டிருக்கின்றது. குழந்தைகள் தான் இந்த தொடருக்கு அதிமாக ரசிகர்களாக இருக்கிறார்கள். பலரும் இந்த தொடரைப் பார்த்து பாராட்டி இருந்தார்கள் என்று கூறியிருக்கிறார்.

Advertisement