நாஞ்சில் விஜயனின் வீட்டுக்குள் ரவுடிகளோடு புகுந்து கொலை முயற்சி செய்துள்ள சூர்யா தேவி. புகைப்படங்கள் மற்றும் வீடியோ.

0
3660
nanjil

வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண சர்ச்சை தான் கடந்த சில மாதத்திற்கு முன்னர் சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வந்த ஒரு விஷயமாக இருந்து வந்தது. மூன்றாவது திருமண விஷயத்தில் வனிதாவை கடந்த சில நாட்களாகவ பலரும் திட்டித் தீர்த்து வந்த நிலையில் தயாரிப்பாளர் ரவீந்திரன் சூர்யா தேவி ஆகிய இந்த இரண்டு பேர் மட்டும் தான் வனிதா குறித்து அடிக்கடி பேட்டிகளை கொடுத்து வந்தார்கள். இப்படி ஒரு நிலையில் இவர்கள் இருவர் மீதும் வனிதா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் ஆனால் திடீரென்று இந்த சர்ச்சையில் நாஞ்சில் விஜயன் பெயரும் அடிபட்டது.

மேலும், சூர்யா தேவிக்கும் நாஞ்சில் விஜயனுக்கு தொடர்பு இருக்கிறது என்றும் வனிதா தரப்பில் இருந்துகூறப்பட்டது . ஆனால், சூர்யா தேவிக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. நான் பல வருடத்திற்கு முன்னால் அவளை சந்தித்தேன். நான் பிரபலம் என்பதால் அவர் தான் வீடியோ எடுத்துக் கொண்டாள். ஆனால், தமிழிசை சௌந்தர்ராஜன் பிரச்சினைக்கு பின்னர் அவளது நம்பரை கூட நான் பிளாக் செய்து விட்டேன். வனிதா விஷயத்தை பற்றி கேட்க தான் அவளுக்கு போன் செய்து பேட்டி எடுத்தேன் என்று கூறியிருந்தார் நாஞ்சில் விஜயன்.

- Advertisement -

இந்த பிரச்சனை இப்படியே போக வனிதாவுக்கு எதிராக நாஞ்சில் விஜயனும், நாஞ்சில் விஜயனுக்கு எதிராக வனிதாவும் புகைப்படங்களை வெளியிட்டனர். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் வனிதாவுக்கு போன் செய்து நாஞ்சில் விஜயன் மன்னிப்பு கேட்டதாக வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி இருந்தார். அதன் பின்னர் நாஞ்சில் விஜயனுக்கு சூர்யா தேவிக்கும் பிரச்சனை முற்றியது. இந்த நிலையில் சூர்யா தேவி சில ரவுடிகளுடன் வீடு புகுந்து தன்னை தாக்கியுள்ளதாக நாஞ்சில் விஜயன் செய்தி ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அதே போல நாஞ்சில் விஜயன் முகத்தில் காயங்களுடன் இருக்கும் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டிருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக நாஞ்சில் விஜயன் வீட்டிற்கு போலீசார் விரைந்து விசாரணை நடத்தி இருக்கிறார்கள். அந்த வீடியோவையும் நாஞ்சில் விஜயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement