வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண சர்ச்சை தான் கடந்த சில மாதத்திற்கு முன்னர் சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வந்த ஒரு விஷயமாக இருந்து வந்தது. மூன்றாவது திருமண விஷயத்தில் வனிதாவை கடந்த சில நாட்களாகவ பலரும் திட்டித் தீர்த்து வந்த நிலையில் தயாரிப்பாளர் ரவீந்திரன் சூர்யா தேவி ஆகிய இந்த இரண்டு பேர் மட்டும் தான் வனிதா குறித்து அடிக்கடி பேட்டிகளை கொடுத்து வந்தார்கள். இப்படி ஒரு நிலையில் இவர்கள் இருவர் மீதும் வனிதா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் ஆனால் திடீரென்று இந்த சர்ச்சையில் நாஞ்சில் விஜயன் பெயரும் அடிபட்டது.
இந்த பிரச்சனை இப்படியே போக வனிதாவுக்கு எதிராக நாஞ்சில் விஜயனும், நாஞ்சில் விஜயனுக்கு எதிராக வனிதாவும் புகைப்படங்களை வெளியிட்டனர். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் வனிதாவுக்கு போன் செய்து நாஞ்சில் விஜயன் மன்னிப்பு கேட்டதாக வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி இருந்தார். அதன் பின்னர் நாஞ்சில் விஜயனுக்கு சூர்யா தேவிக்கும் பிரச்சனை முற்றியது. இந்த நிலையில் சூர்யா தேவி சில ரவுடிகளுடன் வீடு புகுந்து தன்னை தாக்கியுள்ளதாக நாஞ்சில் விஜயன் செய்தி ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
இதோடு நாஞ்சில் விஜயன் தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் சூர்யா தேவி தனது அடியாட்களுடன் வந்து, வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் உடைத்து விட்டார் என்றும், தன்னையும் கட்டையால் அடித்ததோடு தனது அம்மா மற்றும் தங்கை கூட அவர்கள் அடித்துவிட்டார்கள் என்றும் கூறியிருந்தார். மேலும் இதற்கு காரணமான சூர்யா தேவியை கைது செய்ய விட்டால் நாளை நாஞ்சில் விஜயன் உயிரோடு இருக்க மாட்டான் என்றும் கூறியிருந்தார்.
நாஞ்சில் விஜயன் இப்படி ஒரு வீடீயோவை வெளியிட்ட நிலையில் சூர்யா தேவியும் தனது பங்கிற்கு யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் கூறியுள்ள அவர் நாஞ்சில் விஜயன் நாடகமாடுகிறார். நாஞ்சில் விஜயன் பல்வேறு பெண்களை சீரழித்து இருக்கிறான் ‘நீ எல்லாம் செத்து விடு’ என்றும் கூறியிருக்கிறார் சூர்யா தேவி. அதே போல தன்னுடைய பெயரைக் கெடுப்பதற்காக வனிதாவுடன் இணைந்து இந்த குள்ளன் செய்யும் வேலைதான் இது என்றும் விரைவில் இதற்கான ஆதாரங்களை தனது யூடியூப் சேனலில் வெளியிடுவேன் என்றும் சூர்யா தேவி கூறியிருக்கிறார்