தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகனாக பட்டைய கிளப்பி கொண்டு இருந்தவர் ரோபோ ஷங்கர். இவர் குறுகிய காலத்தில் தன்னுடைய நடிப்பாலும், நகைச்சுவை பேச்சின் மூலம் சினிமா உலகில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இதற்கிடையிலே நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் அவஸ்தை பட்டு தொடர்ந்து சிகிச்சை எடுத்து மீண்டும் பழைய நிலைமைக்கு மாறி சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டு வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன் ரோபோ சங்கர் உடல்நல குறைவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய இழப்பு பலருக்குமே பேரதிர்ச்சியாக இருக்கிறது. இவருடைய மறைவிற்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என பலருமே நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார்கள்.
https://www.youtube.com/watch?v=qhtl4IQVuns
இப்படி இருக்கும் நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் நாஞ்சில் விஜயன், ரோபோ சங்கருடைய இறப்பை யாராலுமே ஈடுசெய்ய முடியாது. அவருடைய குடும்பம் மட்டும் இல்ல அவருடன் நெருங்கி பழகிய எங்களுக்குமே பெரிய இழப்புதான். இன்றைக்கு நான் பேட்டி கொடுக்க வந்ததற்கு காரணமே, சமூக வலைத்தளங்களில் பலரும் வாய்க்கு வந்தபடி பலவிதமான கருத்துக்களை சொல்கிறார்கள். அந்த கருத்துக்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டிய கட்டாயத்தில் தான் நான் பேட்டி கொடுக்க வந்தேன்.
ரோபோ சங்கருடைய மரணத்திற்கு காரணம் அவருக்கு இருந்த குடிப்பழக்கம் தான் என்று சொல்கிறார்கள்.
ரோபோ சங்கர் மறைவு:
அதுவும் ஒரு காரணமே தவிர, அது மட்டும் தான் அவர் இறப்புக்கு காரணம் என்று சொல்ல முடியாது. அவர் மேடை கலைஞர் ஆக இருந்தபோது அவருடைய உடம்பில் பூசி கொண்டிருந்த சாயம், ஓயாத உழைப்பு இப்படி எல்லாமே சேர்ந்துதான் அவருடைய மரணத்திற்கு காரணமாக இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு ரோபோ சங்கர் மரணத்தின் விளிம்பிற்கே சென்றிருந்தார். மீண்டு வந்த அவருக்கு எந்த தொலைக்காட்சியுமே வாய்ப்பு கொடுத்து வரவேற்கவில்லை. கடந்த இரண்டு வருடமாகவே அவருக்கு சரியான வேலை வாய்ப்பு இல்லை. வளசரவாக்கத்தில் இருக்கும் அவருடைய வீட்டுக்கு மட்டுமே ஒரு லட்சம் ரூபாய் மாதம் இஎம்ஐ கட்ட வேண்டும். வாய்ப்பு இல்லை என்றால் அவர் என்ன செய்வார்? இதற்காகவே அவர் ஓடி ஓடி உழைத்தார்.
https://youtu.be/WgJ0hqbxyLE?si=OKOitBQ8DnznOgN0
நாஞ்சில் விஜயன் பேட்டி:
அவரால் பிரபலமான தொலைக்காட்சி கூட அவருக்கு வாய்ப்பு தரவில்லை. அவருடைய மகள் இந்திரஜா மீதும் பலவிதமான விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. வருமானம் இல்லாததால் தான் அவளும் பல ப்ரொமோஷன்களை செய்கிறார். அவரையுமே பலரும் விமர்சித்து வருகிறார்கள். ஏற்கனவே ரோபோ சங்கருக்கு சிகிச்சை அளித்த போது 50 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகி இருந்தது. மீண்டும் அவருடைய மருத்துவ செலவிற்கு ரொம்பவே பிரியங்கா கஷ்டப்பட்டார். இந்திரஜா தாலி உட்பட அணிந்த எல்லா நகைகளையும் மருத்துவமனையில் கழட்டி கொடுத்து விட்டார்.

ரோபோ சங்கர் பற்றி சொன்னது:
அதுமட்டுமில்லாமல் அவர்களுடைய மாப்பிளையுமே தன்னுடைய நகைகளையும் கொடுத்துவிட்டார். இது எல்லாம் நான் அருகில் இருந்து கண்கூடவே பார்த்தவன். சோசியல் மீடியாவில் ஒரு குடும்பம் சந்தோஷமாக இருக்கிறது என்பதற்காக அவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று நினைத்து விடக்கூடாது. அவர்களுடைய குடும்பமே நிறைய கடன் சுமையில்தான் இருக்கிறது. அதேபோல ரோபோ சங்கருடைய மனைவி இறுதி ஊர்வலத்தில் நடனமாடியதையும் சிலர் விமர்சித்தார்கள். இறுதி ஊர்வலத்தில் ஆடியது அவர் வேதனையின் உச்சத்தில் ஆடினார். தன்னுடைய கணவருக்கு பிடித்ததை கடைசியாக செய்தார். அதை தமிழ் மக்கள் நிச்சயம் புரிந்து கொள்வார்கள் என்று கூறியிருக்கிறார்.






