ஜெயல்ல, கைய மடக்கி,  இப்ப நினைச்சா கூட அழுகை வருது – ஜெயில் அனுபவத்தை பகிர்ந்த நாஞ்சில் விஜயன்.

0
802
nanjil
- Advertisement -

விஜய் டிவி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது எது, கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு போன்ற பல்வேறு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். மேடை கலைஞராக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர் நாஞ்சில் விஜயன்.பின் தன்னுடைய விடாமுயற்சியினால் விஜய் டிவியில் மிகப் பிரபலமான காமெடியனாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-
nanjil

இவர் நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் லேடிஸ் கெட்டப்பில் தான் நடித்து இருக்கிறார். இதற்கென்றே கெட்டப்பில் விஜயனுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்து இருக்கிறது. மேலும், இவர் விஜய் டிவியின் மூலம் கிடைத்த பிரபலத்தினால் சில படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் வள்ளி திருமணம் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

விஜய் டிவியின் மூலம் பிரபலமான நாஞ்சில் விஜயன் கடந்த 2020ஆம் ஆண்டு இவருக்கும் டிக் டாக் பிரபலமான சூர்யா தேவிக்கும் இடையில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளினால் சண்டை ஏற்பட்டது. இந்த சண்டையில் நாஞ்சில் விஜயன் அடி ஆட்களுடன் சென்று நாஞ்சில் விஜயனை கடுமையாக தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் சூரியா தேவியை கைது செய்தனர். இந்த நிலையில் சூர்யா தேவி போலீசில் கொடுத்திருந்த வாக்குமூலத்தில் வனிதாவை என்னுடன் சேர்ந்து அவதூறாக பேசிவிட்டு இப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டனர்.

இது குறித்துதான் நான் கேட்க்க சென்றிருந்தேன் ஆனால் அவர் தான் என்னை உருட்டுக்கட்டையால் தாக்கினார், என்று கூறவே நாஞ்சில் விஜயனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் தற்போது இவர் சிறையில் இருந்து வெளிவந்த நிலையில் சிறைக்குள் இருந்த அனுபவம் குறித்து ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதில் கூறியதாவது நான் எந்த தவறும் செய்யவில்லை, போலீசார் யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் என்னை கைது செய்துள்ளனர் என்று கூறினார்.

-விளம்பரம்-

மேலும் என்னை கைது செய்த போலீசார் நீதிபதியின் வீட்டிற்கு கொண்டு செல்கிறோம் என்று இரவுதான் அழைத்து சென்றனர். வேலும் அப்போது நான் சபரிமலைக்கு மாலை போட்டிருந்தேன். சிறைக்கு செய்வதினால் மாலை கழட்ட சொன்னார்கள் அப்போது நான் ஒன்றரை மாதம் விரதமிருந்தேன. அது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. பிறகு எல்லா அனுபவத்தையும் பார்த்து விட்டோம். இந்த அனுபவத்தையும் பார்த்து விடலாம் என்று என்னுடைய மனதை அமைதி படுத்திக்கொண்டேன்.

முதல் நாள் காலையில் ஃபைல் ஃபைல் என்று சப்தம் கேட்டது, நான் சரி முதல் நாளில் சிறையை சுற்றிபாக்கலாம் என்று நினைத்தேன் கடைசியில்தான் தெரிய வருகிறது ஃபைல் என்றால் கையை மடக்கி குந்தவைத்து உக்கார வேண்டும் என்று. அது மிகவும் கடினமாக இருந்தது. சாப்பாடு எல்லாம் மிகவும் மோசமாக இருந்தது. காலையில் டி குடிக்கும் இடத்தில உபயோகப்படுத்தும் கப் கழிவறையில் பயன்படுத்துகிற கப்பைபோல் இருந்தது. அதனை நினைத்தால் இன்றும் எனக்கு அழுகை வருகிறது என்று அந்த பேட்டியில் உருக்கமாக தன்னுடைய சிறை வாழ்க்கையை பற்றி கூறியிருந்தார் நாஞ்சில் விஜயன்.

Advertisement