ரக்ஷா பந்தன் குறித்து விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயன் பகிர்ந்திருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நாஞ்சில் விஜயன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது எது, கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். மேடை கலைஞராக தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை தொடங்கியவர் நான்சில் விஜயன்.
இவர் தன்னுடைய விடாமுயற்சியினால் விஜய் டிவியில் மிகப் பிரபலமான காமெடியானாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். மேலும், இவர் நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் லேடிஸ் கெட்டப்பில் தான் நடித்து இருக்கிறார். இதற்கென்று நாஞ்சில் விஜயனுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. மேலும், இவர் விஜய் டிவியின் மூலம் கிடைத்த பிரபலத்தினால் சில படங்களில் கூட நடித்திருக்கிறார். பின் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வெற்றி நடை போட்ட ‘வள்ளி திருமணம்’ என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ரக்ஷா பந்தன்:
அதோடு இவர் சமூக வலைத்தளங்களிலும் படு ஆக்டிவாக இருக்கிறார். அதில் இவர் பதிவிடும் வீடியோக்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது இவர் ரக்ஷா பந்தன் குறித்து வீடியோ ஒன்று பகிர்ந்துள்ளார். அதில் பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, நேற்று ரக்ஷா பந்தனை முன்னிட்டு நாஞ்சில் விஜயனுக்கு ராக்கி கட்டி, அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுள்ளார்.
நாஞ்சில் விஜயன் பதிவு:
இந்திரஜாவின் இந்த செயலால் நாஞ்சில் விஜயன் பயங்கர எமோஷனல் ஆகி, 36 வருஷத்துல இதுவரைக்கும் எனக்கு யாரும் ராக்கி கட்டணதே கிடையாது. முதல் தடவை ஒரு தங்கையாக நீங்க தான் ராக்கி கட்ரீங்க. எனக்கு இது ரொம்ப எமோஷனலான தருணமாக மாறுகிறது என்று இந்திரஜாவிடம் கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோவை தான், ஒரு தாயின் வயிற்றில் பிறந்தால் தான் அண்ணன் தங்கை என்று இல்லை, உண்மையான பாசம் இருந்தாலே அண்ணன் தங்கை ஆகலாம் என்ற கேப்ஷனோடு நாஞ்சில் விஜயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்திரஜா குறித்து:
தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக பட்டையை கிளப்பிக் கொண்டிருப்பவர் ரோபோ சங்கர். இவரின் மகள் தான் இந்திரஜா. இவர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘பிகில்’ படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். முதல் படத்திலேயே இவருடைய நடிப்பு பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி இருந்தார்கள். அதற்குப் பின் இவர் ஜீ தமிழில் அர்ஜுன் தொகுத்து வழங்கியிருந்த ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார். ஆனால், இறுதி வரை இவரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
இந்திரஜா கர்ப்பம்:
அதைத் தொடர்ந்து இவர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த ‘விருமன்’ படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் சில படங்களில் கமிட்டாகி நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், சமீபத்தில் இவருக்கும் கார்த்திக் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்திரஜா- கார்த்திக் இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலக்கியிருந்தார்கள். தற்போது இந்திரஜா கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவர் அந்தப் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.