வெறும் Underwear-வுடன் காப்பாத்துங்கனு கத்திகொண்டே ரோட்டில் ஓடினேன் – நாஞ்சில் விஜயன் அளித்த ஷாக்கிங் பேட்டி.

0
1374
nanjil
- Advertisement -

வனிதாவின் மூன்றாவது திருமண பிரச்சனையில் நாஞ்சில் விஜயன் மற்றும் சூர்யா தேவி பெயரும் அடிபட்டது. ஆரம்பத்தில் ஒன்றாக இருந்த இவர்கள் இருவரும் பேட்டி கூட கொடுத்திருந்தனர். அதே போல வனிதாவுக்கு எதிராக நாஞ்சில் விஜயனும், நாஞ்சில் விஜயனுக்கு எதிராக வனிதாவும் புகைப்படங்களை வெளியிட்டனர். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் வனிதாவுக்கு போன் செய்து நாஞ்சில் விஜயன் மன்னிப்பு கேட்டதாக வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி இருந்தார். அதன் பின்னர் நாஞ்சில் விஜயனுக்கு சூர்யா தேவிக்கும் பிரச்சனை முற்றியது. இந்த நிலையில் சூர்யா தேவி சில ரவுடிகளுடன் வீடு புகுந்து தன்னை தாக்கியுள்ளதாக நாஞ்சில் விஜயன் செய்தி ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் சிகிச்சை பெற்ற பின்னர் பேட்டி ஒன்றில் பங்கேற்று உள்ளார் நாஞ்சில் விஜயன் பேசியதாவது நானும் சூர்யா தேவியும் ஆரம்பத்தில் பேசிக்கொண்டு தான் இருந்தோம் ஆனால் வனிதா விஷயத்தில் எங்கள் இருவருக்கும் ஒரு சில பிரச்சினைகள் ஏற்பட்டு விட்டது. நேற்று நாங்கள் வீட்டில் சூட்டிங்கை எடுத்துக் கொண்டிருந்தபோது. திடீரென்று 3 ஆட்களுடன் வீட்டுக்குள் நுழைந்தால். வீட்டில் நுழையும் போதே கெட்ட கெட்ட வார்த்தைகளில் பேசிக்கொண்டுதான் நுழைந்தால். நான் என்ன என்று கேட்பதற்குள் என்னை அடிக்கத் தொடங்கி விட்டார்கள்.

- Advertisement -

என்னுடன் இரண்டு பெண்களும் குழந்தைகளும் இருந்தார்கள் அவர்களையும் சூர்யா தேவியுடன் வந்த மூன்று நபர்கள் பிடித்து தள்ளி விட்டார்கள்.அவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அவர்களை ஒரு அறைக்குள் தள்ளி பூட்டு போட்டுவிட்டு. பின்னர் என்னை அவர்கள் சரமாரியாக அடித்தார்கள் வலி தாங்க முடியாமல் நான் ரோட்டில் ஓடி வந்து விட்டேன். அப்போது என்னுடைய உடைகளை பிடித்து இழுத்து விட்டார்கள். அதனால் நான் அரை நிர்வாணத்துடன் என்னை காப்பாற்றுங்கள் என்று ரோட்டில் கத்திக் கொண்டே ஓடினேன்.

என் தலையில் அடித்து விட்டதால் எனக்கு மயக்கம் வருவது போல ஆகிவிட்டது அதனால் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன் என்ன பிரச்சனை காரணமாக அங்கே இருக்க முடியாது என்பதற்காக மீண்டும் வீட்டிற்கு வந்துவிட்டேன். அவர்கள் மீது நான் காவல் துறையில் புகார் கொடுத்துள்ளேன். அவர்களும் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர் என்று கூறி உள்ளார் நாஞ்சில் விஜயன்

-விளம்பரம்-
Advertisement