50 ஆண்டுகள் சினிமாவே பார்த்திராத தமிழ் தெம்மாங்கு பாட்டியாம்மாவிற்கு தேடி வந்த தேசிய விருது.

0
423
nanjamma
- Advertisement -

தெம்மாங்கு பாடிய தமிழ் பாட்டி அம்மாவுக்கு தேசிய விருது தேடி வந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தேசிய திரைப்பட விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 67வது தேசிய திரைப்பட விருதுகள் நடைபெற்றது. அதில் 2019 ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்பட்டு இருந்தது. அதில் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. அசுரன் படத்துக்காக தயாரிப்பாளர் தாணு மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோருக்கு தேசிய விருது கிடைத்தது.

-விளம்பரம்-

பின் தனுஷ், விஜய் சேதுபதி என பல நடிகர்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது. தற்போது 68 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 1, 2020 மற்றும் டிசம்பர் 31, 2020 க்கு இடையில் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட சிறப்பு மற்றும் அம்சம் அல்லாத திரைப்படங்கள் திரைப்பட விருதுகளுக்கு தகுதி பெற்றன. எப்போதும் தேசிய திரைப்பட விருதுகள் மீது மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்.

- Advertisement -

தேசிய திரைப்பட விருதுகள்:

ஆண்டுதோறும் வெளியாகும் திரைப்படங்களில் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த படம் எது என்று நடுவர்களால் தேர்வு செய்து இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. தற்போது விருதுக்கான இறுதிப் பட்டியலை நிறைவு செய்து தகவல் மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இடம் தேர்வு குழுவினர் வழங்கி இருக்கின்றனர். அதன்படி கேரளா தமிழ்ப்பாட்டிக்கு தேசிய விருது கிடைத்து இருக்கிறது. கேரளாவில் அட்டப்பாடியில் தமிழ் பாட்டி ஒருவர் வசித்து வருகிறார்.

நஞ்சம்மாள் குறித்த தகவல்:

இவர் தமிழகத்தை சேர்ந்தவர். இவருடைய பெயர் நஞ்சம்மாள். திருமணத்திற்குப் பிறகு இவர் கேரளாவின் அட்டப்பாடியில் பாடியில் உள்ள பகுதிக்குக் குடியேறினார். பின் இவர் இங்கேயே செட்டில் ஆகிவிட்டார். மேலும், இவர் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு சினிமா கூட பார்க்கவில்லை. ஆனால், திருமணத்திற்கு முன் இவர் காலையில் 4 மணிக்கு சோறு சமைத்து விட்டு சினிமா கோட்டையில் எம்ஜிஆர் படம் பார்ப்பதற்காக தவம் கிடப்பாராம்.

-விளம்பரம்-

நஞ்சம்மாள் பாடிய பாடல்:

இந்நிலையில் இவர் மலையாள சினிமாவில் ஐயப்பனும் கோஷியும் படத்தில் பாடி இருக்கிறது. காட்டிலும் மேட்டிலும் களைப்புத்தீர பாடிய நாட்டுப்புற தெம்மாங்கு பாடல் திரையரங்களில் ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது. இதுதான் இவர் சினிமாவில் பாடிய முதல் பாடல். இந்த படத்தில் பிருத்திவிராஜ், பிஜு மேனன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் யாருமே நஞ்சம்மாளுக்கு தெரியாது. இந்த படத்தில் இவர் 2 பாடல்களைப் பாடியிருக்கிறார்.

நஞ்சம்மாவுக்கு கிடைத்த தேசிய விருது:

இந்த படத்தில் காட்டில் உள்ள சந்தன மரங்கள் பூத்து இருப்பதை காண்பித்து குழந்தைகளை சாப்பிட வைக்கும் பாடல், குழந்தைகளை தாலாட்டும் தெய்வ மகளே பாடல். இந்த 2 பாடல்களும் ஹிட் அடித்திருக்கிறது. இந்நிலையில் படத்தில் டைட்டில் பாடலாக இருளர் மொழியில் ஒலித்த சந்தனமரம் பாடலுக்காக தான் அட்டப்பாடி நஞ்சம்மாவுக்கு தற்போது தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலானது தொடர்ந்து பலரும் நஞ்சம்மாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement