இதுக்குத்தான் இவ்ளோ பில்டப்பா – தி கிரே மேன் படம் பார்த்து கடுப்பான தனுஷ் ரசிகர்கள்.

0
463
Dhanush
- Advertisement -

தனுஷின் தி கிரே மேன் படத்தை பார்த்து ரசிகர்கள் கடுப்பாகி திட்டி வரும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தனுஷ். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் இறுதியாக தனுஷ் நடித்த மாறன் திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகி இருந்தது. இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. மேலும், இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. அதற்கு பின் தனுஷ் அவர்கள் நானே வருவேன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். கலைப்புலி எஸ் தாணு உடைய வி கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்து இருக்கிறது. செல்வராகவன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

தனுஷ் நடிக்கும் படங்கள்:

தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தனுஷ் அவர்கள் வாத்தி, sir போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனை அடுத்து தனுஷ் அவர்கள் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ்- இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மீண்டும் இணைந்துள்ளனர்.

மாதேஸ்வரன்-தனுஷ் கூட்டணி:

இந்த படத்தில் படத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அதனை தொடர்நது இயக்குனர் மாதேஸ்வரன் -தனுஷ் கூட்டணியில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாக இருக்கிறது. தற்போது இவர் ஹாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார். ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு வெளியான ஃபஹீர் என்ற ஹாலிவுட் படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடித்து இருந்தார். தற்போது அவெஞ்சர் பட இயக்குனர்கள் இயக்கிய தி கிரே மேன் படத்தில் தனுஷ் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

தி கிரே மேன் படம் குறித்த தகவல்:

பிரம்மாண்ட பொருட் செலவில் தயாராகியுள்ள இந்த படத்தில் நடிகர் தனுஷ் அவிக்சான் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றார். கிரிஸ் எவான்ஸ், ரியான் காஸ்லிங், அன்னா டி அர்மாஸ், ஜூலியா பட்டர்ஸ் பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் நேற்று தான் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. இந்த படத்துக்காக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தனுஷ் அவர்கள் தீவிரமான புரமோஷன் செய்து இருந்தார். சமீபத்தில் கூட இப்படத்தின் இயக்குனர்களான ரூஸோ சகோதரர்கள் இந்தியா வந்த போதுகூட அவர்கள் தனுஷை முன்னிலைப்படுத்தி தான் தி கிரே மேன் படத்தை புரமோட் செய்திருந்தார்கள்.

திட்டி தீர்க்கும் தனுஷ் ரசிகர்கள்:

இப்படி படக்குழு தனுசுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் படத்தில் தனுஷ் உடைய கதாபாத்திரம் வெயிட்டாக இருக்கும் என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால், படம் வெளிவந்த பிறகு இந்த படத்தில் தனுஷுக்கு மிகச் சிறிய கதாபாத்திரம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் வரும் காட்சிகள் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே என்ற தகவல் வெளியாகியது. இதைப்பார்த்த ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்து இருக்கிறார்கள். சிலர் கடுப்பில் இதற்குத்தான் இவ்வளவு பில்டப்பா? என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். படத்தின் ஹீரோ என்ற ரேஞ்சுக்கு ப்ரோமோட் செய்ததற்கு தனுஷ் ரசிகர்கள் திட்டி தீர்க்கின்றனர்.

Advertisement